சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் வழக்கமான விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொள்ள இருந்தனர். சோயுஸ் விண்கலத்தில் இருந்து கசிவு ஏற்பட்டு துகள்கள் வெளியேறுவதை விமானக் கட்டுப்பாட்டாளர்கள் கவனித்ததையடுத்து நடைப்பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
சோயுஸ் எம்.எஸ்-22 காப்ஸ்யூலின் பின் பகுதியில் ஸ்னோஃப்ளேக் போன்ற துகள்கள் வெளியேறி கசிவு ஏற்பட்டது என விஞ்ஞானிகள் கூறினர். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 பேர் உள்ளனர். 3 ரஷ்ய விண்வெளி வீரர்கள், 3
அமெரிக்க நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் 1 ஜப்பானிய விண்வெளி வீரர் இருக்கின்றனர். வீரர்கள் யாருக்கும் இதனால் ஆபத்து ஏற்படவில்லை என நாசா கூறியது.
இரண்டு விண்வெளி வீரர்கள் செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் விமானப் பொறியாளர் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் ரஷ்ய பிரிவில் ஒரு ரேடியேட்டரை ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது இந்த ஆபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறினர்.
சோயுஸ் விண்கலம் கடந்த செம்படம்பர் மாதம் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பட்டது. இந்த விண்கலத்தில் ப்ரோகோபியேவ், மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் சென்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/