ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்து வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகிறது.
கீரியும் பாம்புமாக பூமியில் தான் இரு நாடுகளும் இருக்கின்றன.
ஆனால், விண்வெளியில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரரக்கள் ஒன்றாக வலம் வந்தனர். கடந்த ஒரு மாதமாக ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்காமல் நாசா தவிர்த்து விடுவதையும் நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.
இந்தப் போர் காரணமாக விண்வெளியில் எங்களது பணிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாசா தெரிவித்திருந்தது.
நாசா விண்வெளி வீரர் மார்க் வன்டே ஹெய், கடந்த புதன்கிழமை பூமிக்கு திரும்பினார். அவர் மட்டுமல்ல, அவருடன் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களும் கஜகஸ்தானில் தரையிறங்கினர்.
மொத்தம் 355 நாட்களை விண்வெளியில் வாழ்த்துவிட்டு திரும்பினார் மார்க்.
ரஷ்ய விண்வெளி வீரர்களின் பெயர்கள் ஆன்டன் ஷ்கப்லெரோவ் மற்றும் பியோடிர் துப்ரோவ் ஆகும்.
இவர்கள் மூவரும் ரஷ்ய போர் விமானத்தில் வீடு திரும்பினர்.
விண்வெளி நிலையம் மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே பனிப்போருக்குப் பிறகு நட்புறவின் அடையாளமாக இருந்தது. ரஷ்யாவை சர்வதேச ஒத்துழைப்பின் சமூகத்திற்குள் இழுத்து கொண்டு வந்தது.
ரஷ்ய ராக்கெட் பொறியாளர்கள் சிறந்த ஏவுகணைகளை உருவாக்க விரும்பும் வட கொரியா போன்ற நாடுகளுக்கு நிபுணத்துவத்தை விற்பதையும் தடுத்தது.
ஆனால் கடந்த மாதத்தில், ரஷ்யா மேற்கத்திய நாடுகளிடமிருந்து தடைகள், கண்டனங்களை எதிர்கொண்டது. உலக நாடுகளிடையே தனிமைப்படுத்தலை எதிர்கொண்டது.
அமெரிக்க அதிர் ஜோ பைடன், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வன்மையாகக் கண்டித்தார்.
இதனால், இனி வரும் காலங்களில் நாசாவுக்கு ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்துக்குமான நல்லுறவு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
பூமியின் 5,680 சுற்றுப்பாதைகளின் பயணத்திற்குப் பிறகு, 150 மில்லியன் மைல்களுக்கு மேல் பயணித்த வந்த மார்க்கை நாசா விமான மருத்துவர்கள், பொது விவகார அதிகாரிகள் மற்றும் விண்வெளி வீரர் அலுவலகம் மற்றும் விண்வெளி நிலைய நிர்வாகத்தின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து காரகண்டா நகருக்கு ரஷ்ய விமானத்தில் 3 விண்வெளி வீரர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து, அமெரிக்க விண்வெளி வீரர் நாசா ஜெட்டில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அதிபர் புதினுக்கு எதிராக போர் குற்ற விசாரணை எப்படி நடைபெறும்?
"எங்கள் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்காக, நாசாவிற்கும் எங்கள் சர்வதேச கூட்டாளர்களுக்கும் இடையிலான உறவு தொடர்கிறது" என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்தார்.
ரஷ்ய ராக்கெட்டை நம்பி இருப்பதால் செவ்வாய் கிரகத்திற்கான ரோவர் பயணத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஒத்திவைத்தது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையேயான கூட்டு முயற்சியான சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை கட்டுமானம் 1998 ஆம் ஆண்டு தொடங்கியது.
நாசாவால் நிதியளிக்கப்பட்டு ரஷ்யாவால் கட்டப்பட்டது, இது உண்மையில் நாசா தலைமையிலான விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாகும். சர்வதேச விண்வெளி நிலையத்தின் நீண்ட கால எதிர்காலம் தெளிவாக இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.