விக்ரம் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் இறங்கியபோது, சந்திரனின் மேற்பரப்பில் ஒரு 'எஜெக்டா ஹாலோ'-வை உருவாக்கியுள்ளது.
ஒரு புதிய ஆய்வின்படி, விக்ரம் சந்திரனின் தூசியை எழுப்பி, அது நிலவில் இறங்கும் போது தன்னைச் சுற்றி ஒரு பிரகாசமான பகுதியை உருவாக்கியுள்ளது.
அதாவது, சந்திரயான்-3 லேண்டர் மாட்யூல், சந்திரப் பொருளின் கண்கவர் ‘எஜெக்டா ஹாலோ’வை உருவாக்கியுள்ளது.
இதனை விஞ்ஞானிகள் தரையிறங்கும் இடத்தைச் சுற்றி 108.4 m² பரப்பளவில் சுமார் 2.06 டன்கள் சந்திர எபி ரெகோலித் வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்ததாக மதிப்பிட்டுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்புகள் அக்டோபர் 26 அன்று இந்தியன் சொசைட்டி ஆஃப் ரிமோட் சென்சிங் இதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளன.
முன்னதாக செப்டம்பர் 22 அன்று, ஒரு புதிய சந்திர நாள் தொடங்கிய பிறகு, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், லேண்டர் அல்லது ரோவரில் இருந்து எந்த சமிக்ஞையும் பெறப்படவில்லை. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் (பூமியில் சுமார் 14 நாள்களுக்கு) ஒரு முழு சந்திர நாளில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“