போயிங் 747 மாற்றியமைக்கப்பட்ட (Modified Boeing 747) விமானத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்கள் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது என விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் முதல் சுற்றுப்பாதை ஏவுதலை நடத்த உள்ளன.
விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தை ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் நிறுவினார். இந்த நிறுவனம் போயிங் 747 விமானத்தை மாற்றியமைத்து ராக்கெட் ஏவுதலுக்கான சாத்தியத்தை திட்டமிட்டது. அதன்படி விமானத்தின் இறக்கையின் கீழ் ராக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.
விமானம் பறக்கும்போது ராக்கெட் அட்லாண்டிக் பெருங்கடலில் விடப்படும். 7 வாடிக்கையாளர்களின் சிறிய செயற்கைக்கோள்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும். இது 'Horizontal launch' ஏவுதல் என்று கூறப்படுகிறது.
திங்கட்கிழமை ஏவுதல் பணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. வானிலை மற்றும் பிற காரணங்களைப் பொறுத்து ஏவுதல் இருக்கும் என விர்ஜின் ஆர்பிட் தெரிவித்துள்ளது. இந்த ஏவுதல் செய்யப்படாவிட்டால் ஜனவரி இறுதியில் ராக்கெட் செலுத்தப்படும் பேக்-அப் ஏவுதலுக்கான திட்டமும் உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட் மீ அப்
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக ராக்கெட் சோதனை செய்யப்பட்டதாக விர்ஜின் ஆர்பிட் தெரிவித்தது.
விமானம் மூலம் ராக்கெட் ஏவுதல் திட்டம் 'ஸ்டார்ட் மீ அப்' (Start Me Up) என்று அழைக்கப்படுகிறது. இது ரோலிங் ஸ்டோன்ஸிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரின் பாடல் வரி இந்த திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டதை விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் யு.கே ஸ்பேஸ் ஏஜென்சி, கார்ன்வால் கவுன்சில் மற்றும் பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்கிறது. இது கூட்டுத் திட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.
விர்ஜின் ஆர்பிட் லாஞ்சர்ஒன் சிஸ்டம் மூலம் விமான நிலையம் விண்வெளி நிலையமாக மாறும் என்பதை இந்த ஏவுதளம் நிரூபிக்கிறது. மனிதகுலத்தின் புதுமைகள் அனுப்பபடுகிறது என்று விர்ஜின் ஆர்பிட் தலைமை நிர்வாகி டான் ஹார்ட் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/