தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை (Fagradalsfjall volcano) நேற்று (ஆகஸ்ட் 3) மீண்டும் வெடிக்கத் தொடங்கியது என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக எட்டு மாதங்களுக்கு முன் எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் (Reykjavik) இருந்து 32 கி.மீ தொலைவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. பொதுமக்கள் எரிமலைக்கு அருகில் செல்ல வேண்டாம் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சர்வதேச விமானப் நிலையமான கெஃப்லாவிக் (Keflavik) விமான நிலையம் எரிமலை பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இருப்பினும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட வில்லை. விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
நிபுணர்கள் முன்பே கணித்து, எதிர்பார்த்தது தான் என்று கூறுகின்றனர். காரணம், கடந்த வாரத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் peninsula பகுதியில் நிலநடுக்கம் ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டது. எரிமலை நிபுணர் மேக்னஸ் டுமி குட்மண்ட்சன் கூறுகையில், “வெடிப்பு சிறியதாக உள்ளது எனத் தோன்றுகிறது. இருப்பினும் ஆய்வு செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
அதே பகுதியில் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பு பல மாதங்களுக்கு நீடித்தது. தீப்பிழம்புகளுடன் எரிமலை குழம்பு பல மாதங்களுக்கு ஓடியது. இதை லட்சக்கணக்கான மக்கள் கண்டனர். வடக்கு அட்லாண்டிக்கில் பகுதியில் உள்ள ஐஸ்லாந்து இடங்களில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எரிமலை வெடிப்பு நிகழ்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.