/indian-express-tamil/media/media_files/2025/10/24/water-in-rare-pre-solar-system-rock-2025-10-24-11-01-57.jpg)
நிலவின் இருண்ட பக்கத்தில் கிடந்த விண்கல்... பூமியின் வரலாற்றை மாற்றும் ஆய்வு!
நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து முதன்முறையாக சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளில் சீன விஞ்ஞானிகள் வியக்கத்தக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிலவின் மண்ணை பூமிக்குக் கொண்டு வந்த சாங்’இ-6 (Chang’e-6) திட்டத்தின் மூலம், அரிய விண்கல்லின் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தத் துண்டுகள் நமது சூரிய குடும்பம் உருவாவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும், அவற்றில் தண்ணீர் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தத் துண்டுகள் சூரிய குடும்பத்தின் ஆரம்ப வரலாற்றைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும். குவாங்சோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோகெமிஸ்ட்ரி (GIG) தலைமையிலான இந்த ஆராய்ச்சி, புரோசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் (Proceedings of the National Academy of Sciences) இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
அரிய விண்கல் கண்டுபிடிப்பின் முக்கிய அம்சங்கள்
ஆய்வுக் குழுவினர் சி.ஐ. கான்ட்ரைட்டுகள் (CI chondrites) எனப்படும் அரிய வகை விண்கல்லின் துண்டுகளை அடையாளம் கண்டுள்ளனர். இவை பொதுவாக சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதியில் காணப்படுபவை, மேலும் தண்ணீர், கரிமப் பொருட்களால் செறிவூட்டப்பட்டவை. பூமியில் சேகரிக்கப்படும் மொத்த விண்கற்களில், சி.ஐ. கான்ட்ரைட்டுகள் 1%-க்கும் குறைவாகவே உள்ளன.
பூமிக்கு வளிமண்டலம் மற்றும் தட்டுப் புவிப்பலகை (plate tectonics) செயல்பாடு இல்லாததால், நிலவு அதன் மீது விழும் பழங்கால விண்கல் மோதல்களின் பதிவுகளை மாறாமல் பாதுகாக்கிறது. இது ஆரம்பகால சூரிய குடும்பத்தின் இயற்கையான ஆவணக்காப்பகமாக செயல்படுகிறது. இந்த மாதிரிகள், சூரிய குடும்பம் உருவாகும் முன் இருந்த தூசியைக் கொண்ட விண்கற்களுடன் ஒத்திருக்கின்றன. அவற்றின் வேதியியல் அமைப்பை ஆய்வு செய்வதன் மூலம், விண்கற்கள் நிலவு மற்றும் பூமிக்கு தண்ணீர் போன்ற அத்தியாவசியக் கலவைகளை எவ்வாறு கொண்டு வந்தன என்பதை அறிய முடியும்.
நிலவின் தூரப் பக்கத்தில் உள்ள மிகப்பெரிய, பழமையான (Pre-Nectarian) படுகையிலிருந்து சாங்’இ-6 திட்டத்தால் கொண்டுவரப்பட்ட நிலவு மாதிரிகளில், 7 ஆலிவின் (olivine) அடங்கிய துண்டுகளை நாங்க கண்டோம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவின் பெரும்பாலான விண்வெளித் திட்டங்கள், பூமிக்கு நேராக இருக்கும், குறைந்த பள்ளங்களைக் கொண்ட நிலவின் அண்மைக் பக்கத்திலிருந்து பாறைகளைச் சேகரித்துள்ளன.
ஆனால், சாங்’இ-6 விண்கலம், நிலவின் மிகப் பெரிய மற்றும் ஆழமான பள்ளமான தென் துருவ-ஐட்கென் படுகையில் (South Pole–Aitken Basin), அதாவது சந்திரனின் தூரப் பக்கத்தில் தரையிறங்கியது. இந்த இடம் சந்திர மேற்பரப்பில் கால் பகுதியைக் கொண்டுள்ளது. இது பண்டைய சிறுகோள் மோதல்கள் மற்றும் சந்திரனின் மேன்டில் (mantle) பகுதிகளிலிருந்து வந்த பாறைகளை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
நிலவின் அண்மைக் பக்கத்திலிருந்து தூரப் பக்கம் ஏன் இவ்வளவு வித்தியாசமாகத் தெரிகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இந்தப் பகுதியை ஆய்வு செய்ய விரும்பினர். சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய விண்கல் நிலவைத் தாக்கியபோது இந்தப் படுகை உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முதலில், இந்த மாதிரிகள் சந்திரனின் மேன்டில் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். ஆனால், இரும்பு, மாங்கனீசு மற்றும் துத்தநாகத்தின் அளவுகளைச் சோதித்த பிறகு, அவற்றின் கலவை அறியப்பட்ட சந்திர பாறைகளுடன் பொருந்தவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதன் பிறகு, 3 ஆக்ஸிஜன் ஐசோடோப்புகளின் விகிதங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். இவை கிரகப் பொருட்களின் தோற்றத்தை வெளிப்படுத்தும் வேதியியல் 'கைரேகைகளாக' இருக்கின்றன. இதன் மூலம் இந்த அரிய CI கான்ட்ரைட் விண்கல் துண்டுகள் கண்டறியப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us