ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சமீபத்தில் எடுத்த படத்தை வெளியிட்டுள்ளது. இரண்டு விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி அழகாக படம் எடுத்துள்ளது. இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடு ஒன்று இணைவதை படம் எடுத்துள்ளது. இந்த விண்மீன் இணைப்புக்கு IC 162 (ஐ.சி 1623) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விண்மீன்கள் இணைப்பால் ஏற்படும் நட்சத்திர வெடிப்பு
விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று மோதுவதன் மூலம், இந்த இரண்டு விண்மீன் திரள்களும் இப்போது ஒரு பெரிய நட்சத்திர உருவாக்கத்தை தூண்டியுள்ளன. இது நட்சத்திர வெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திர வெடிப்பு பால்வெளி மண்டலத்தில் உள்ள விண்மீனை விட 20 மடங்கு அதிக விகிதத்தில் புதிய நட்சத்திரங்களை உருவாக்குகிறது.
இந்த விண்மீன் இணைப்பு நீண்ட காலமாக வானியலாளர்களின் ஆர்வத்தை தூண்டி வந்தது. முன்னர் ஹப்பிள் மற்றும் பிற விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் விண்மீன் இணைப்பு படம்பிடிக்கப்பட்டது. விரைவான நட்சத்திர வெடிப்பு இன்ஃபிரா ரெட் கதிர்வீச்சை வெளியிடுகிறது. இந்த இரண்டு விண்மீன் திரள்கள் மிகப்பெரிய கருந்துளையை உருவாக்கலாம் என இ.எஸ்.ஏ கூறுகிறது.
ஏன் ஜேம்ஸ் வெப் சிறந்தது?
முன்பு ஹப்பிள் போன்ற தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட படங்களில் விவரங்கள் தெளிவாக வெளிப்படவில்லை. ஏனெனில் கனமான தூசிகளால் மறைக்கப்பட்டது. ஆனால் வெப்பில் அதன் அளவு துல்லியமாக உள்ளது. இன்ஃபிரா ரெட் கதிர்வீச்சுகளை கையாளும் திறன், படத்தின் கேமரா ரெசொல்யூசன் ஆகியவை பொருத்தமாக உள்ளது.
வானியலாளர்கள் வெப்பின் MIRI, NIRSpec மற்றும் NIRCam கருவிகளைப் பயன்படுத்தி விண்மீன் திரள்கள் இணைப்பை தெளிவுபடுத்தினர். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி நவீன தொழில்நுட்பத்துடன், முன்னோடி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது. நாசா பல மில்லியன் டாலர்கள் செலவிட்டு இதை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பியது. ஜேம்ஸ் வெப் ஆதி பிரபஞ்சத்தை படம் பிடித்து உலக நாடுகளை வியக்க வைத்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் பல அறிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil