கடல் வெப்ப அலையை அதிகரிக்க கூடிய எல் நினோ நிகழ்வு இந்தாண்டு மீண்டும் திரும்புவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு கூறுகிறது. இது குறித்து DW Tamil யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கால நிலை மாற்றம், எல் நினோ மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகியவை குறித்து கூறியுள்ளது.
Advertisment
கோடை வெப்பம் இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாட்டி வதைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தாண்டு இறுதியில் வானிலையைப் புரட்டிப் போட வைக்கும் சூப்பர் எல் நினோ உலகை நெருங்கி கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வெப்ப நிலை உயர்வை சென்னை, புதுச்சேரி போன்ற கடற்கரை நகர்கள் எதிர்கொள்ள கூடும். ஏற்கனவே ஏப்ரல், மே மாதங்களில் இதுவரை இல்லாத கடல் வெப்ப நிலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. ஆராய்ச்சியாளர்களே அச்சப்படும் அளவிற்கு பூமியின் வெப்ப நிலை திடீர் உயர்வு ஏற்படும் என கணிக்கின்றனர்.
எல் நினோ, லா நினோ என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடலில் காற்றின் வேகம் குறைந்தால் வெப்ப அலைகள் ஐரோப்பாவை வறுத்தெடுக்கும், பிரேசிலில் விவசாயம் பாதிக்கப்படும், இந்தியாவில் வறட்சி ஏற்படும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்த ஆண்டு எல்நினோ அதைத்தான் செய்யப்போகிறது. பசிபிக் பெருங்கடலில் காற்றின் வேகத்தில் ஏற்படும் இயற்கையான மாற்றம் 2023 உலகளாவிய வெப்ப நிலையை ஒட்டுமொத்தமாக மாற்றக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Advertisment
Advertisements
பசிபிக் பெருங்கடலில் காற்றின் வேகம் குறைந்தால் கலிபோர்னியாவில் பலத்த மழை பெய்யும், வெப்ப அலைகள் ஐரோப்பாவை வறுத்தெடுக்கும், வறட்சியால் பிரேசில் முதல் இந்தோனேசியா வரை விவசாயம் பாதிக்கப்படும், தென் ஆப்பிக்கா, இந்தியாவில் வெப்ப நிலை அதிகரிக்கும். உலகம் முழுவதும் வானிலை மாற்றம் ஏற்படும். 2023 இந்த மாற்றம். கடல் வெப்ப அலையை அதிகரிக்க கூடிய எல் நினோ நிகழ்வு இந்தாண்டு மீண்டும் திரும்புவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு கூறுகிறது.
எல் நினோ, லா நினோயோ என்பது பசிபிக் கடலில் இயற்கையாக ஏற்படக் கூடிய கால நிலை மாற்றம். இது உலகளாவிய வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். பசிபிக் பெருங் கடலில் சராசரி வெப்ப நிலை அளவு குறிப்பிட்ட காலத்திற்க்குள் அதிகரிப்பது எல் நினோ. அதாவது கடலில் வெப்பநிலை 0.8% அதிகரிக்கும் போது எல் நினோ உருவாகிறது. இந்த நிகழ்வு சராசரியாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எல் நினோவுக்கு எதிர்மறையாக நடப்பது லா நினியோ. கடல் நிலை வழக்கத்திற்கு மாறாக குறைந்து குளிர்ச்சியான நிலை உருவாகும். எல் நினோ முடிந்து லா நினோ உருவாகும்.
இந்தாண்டு சூப்பர் எல் நினோ நிகழ்வு நடைபெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளளது. எல் நினோ 0.8% வெப்பநிலை ஆக இருந்தால் சூப்பர் எல் நினோவின் போது 1.5 முதல் 2% வரை வெப்பநிலை உயரக் கூடும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். சூப்பர் எல் நினோ தாக்கத்தால் உலகின் வெப்ப நிலை முதல் முறையாக 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை.
இந்தியாவுக்கு பாதிப்பு
இதன் தாக்கம் 2023 தொடங்கி 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். இந்த கால கட்டத்தில் அமெரிக்கா போன்ற பகுதிகளில் தீவிர மழை, சூறாவளி, திடீர் வெள்ளம் போன்ற அசாதாரண நிலை உருவாகும். உலகின் மற்ற பகுதிகள் காட்டு தீ, வறட்சி, தாக்கம் ஏற்படும்.
முக்கியமாக தென் ஆப்ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தீவிர வெப்ப நிலை, வறட்சியால் பாதிக்க கூடும். ஏற்கனவே இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் முன்கூட்டியே தொடங்கி விட்டது. இதே நிலை நீடித்தால் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தி குடிநீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
புவி வெப்பம் அடைதல் வரம்பு 2027 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகரி செல்சியல் கடக்க 66 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர் இதற்கு எல் நினோ காரணம் என்றாலும் மனிதர்களும் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தொழிற்துறை வளர்ச்சி, புதைப் படிவ எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர்.
உயர்ந்து வரும் உலக வெப்ப நிலையை கட்டுப்படுத்த பசுமை வாயுக்களின் உமிழ்வை குறைக்க உள்ளதாக உலகத் தலைவர்கள் உறுதி அளித்தனர். எனினும் எல் நினோ போன்ற நிகழ்வு மனித வாழ்க்கை போராட்டத்தை மேலும் தீவிரமாக்குகின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“