இன்று (ஆகஸ்ட் 30) இரவு வானில் ஒரு அரிய வகை சூப்பர் ப்ளு மூன் நிகழ்வு நடைபெற உள்ளது. இது ஒரு அரிதான நிகழ்வாகும். ஆகஸ்ட் 2021 க்குப் பிறகு முதல் ப்ளு மூன் இன்று நிகழ உள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை.
பொதுவாக இவை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த முறை அரிதாக நிகழ்கிறது. ஒரு மாதத்தில் இரண்டாவது முழு நிலவு வெளிப்படும் போது, அது
"ப்ளு மூன்" என்று அழைக்கப்படுகிறது. இப்படி அரிதான நிகழ்வைத் தான் "once in a blue moon" என்று குறிப்பிடுகிறோம். முதல் நிகழ்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிரகாசமான நிலா
பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு அருகாமையில் இருப்பதால், நிலா வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும். அதன் "நீல" தன்மையை அதன் ஈர்க்கக்கூடிய அளவுடன் இணைத்து, இது "சூப்பர் ப்ளூ மூன்" என்று பொருத்தமாக அழைக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, "ப்ளூ மூன்" என்று சொல்வதால் நிலா ப்ளூ நிறமாக மாறும் என்று அர்த்தமில்லை. மாறாக நிகழ்வின் அரிதான தன்மையைக் குறிக்கிறது. இந்த அரிய நிகழ்வு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தோன்றாது.
ப்ளு மூன்
"ப்ளு மூன்" என்பது ஒரு மாதத்திற்குள் வரும் இரண்டாவது முழு நிலவைக் குறிக்கிறது - இது ஒரு அரிய நிகழ்வாகும். ஏனெனில் முழு நிலவுகள் பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழும். ஓர் ஆண்டில் 4 முழு நிலவுகள் வரும் போது 3-வது முழு நிலவு ப்ளு மூன்-ஆக கருதப்படுகிறது. இந்த பாரம்பரிய வரையறை சில காலமாக நடைமுறையில் உள்ளது.
சூப்பர் ப்ளூ மூன்
வடக்கு ஹெமிஸ்பியரின் கோடை இறுதி நாள் ஆகஸ்ட் 30-ம் தேதி "சூப்பர் ப்ளூ மூன்" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நிலவுகள் வழக்கமான முழு நிலவுகளை விட 16 சதவீதம் பிரகாசமாக இருக்கும்.
இதையும் படிங்க: https://tamil.indianexpress.com/science/blue-supermoon-in-august-will-only-happen-again-9-years-later-733179/
இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
சூப்பர் ப்ளூ மூன் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 8.37 மணிக்கு EDT தோன்றும். இந்தியாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 5.57 சூப்பர் ப்ளூ மூன் தோன்றும். அப்போது நிலா அதிக பிரகாசத்துடன் தெரியும். இது சந்திரோதயம், நீல நிலவின் அழகைக் கண்டு வியக்க ஏற்ற தருணத்தை வழங்குகிறது. ஆகஸ்ட் 31 அன்று சந்திர உதயம் சற்று தாமதமாக நிகழும் என்பதால் ஐரோப்பிய பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். லண்டனில், சந்திரன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 15 நிமிடங்களுக்குப் பிறகு இரவு 8:08 மணிக்கு தோன்றும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.