scorecardresearch

வெற்றிகரமாக பறந்த எல்.வி.எம் 3: வணிக ரீதியில் செயற்கை கோள்கள் அனுப்புவதை இஸ்ரோ எப்படி உறுதி செய்யும்?

இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

OneWeb-ISRO
OneWeb-ISRO

இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் நேற்று (மார்ச் 26) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டாவது வணிக ஏவுதல் ஆகும். இங்கிலாந்து அரசு மற்றும் இந்தியாவின் பார்தி எண்டர்பிரைசஸ் ஆதரவுடன் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒன்வெப் நிறுவனத்திற்காக இஸ்ரோ நிகழ்த்திய இரண்டாவது ஏவுதல் இதுவாகும்.

இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டான எல்.வி.எம்-3-யின் ஆறாவது ஏவுதல் இதுவாகும். தற்போது ஏவப்பட்ட ஒன்வெப் செயற்கை கோள்கள் Low earth orbit (LEO) பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

2020-ம் ஆண்டு விண்வெளித் துறையில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்பை அரசு அனுமதித்தது. அதன்படி உலகளாவிய வணிக விண்வெளி சந்தையில் இந்தியா தனது பங்கை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

இஸ்ரோ ஒன்வெப் ஏவுதல் எப்படி நடந்தது?

ஒன்வெப் நிறுவனம் முதலில் தனது செயற்கைக்கோள்களை ரஷ்ய விண்வெளி நிறுவனம் மூலம் ஏவ திட்டமிட்டிருந்தது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஏஜென்சி ஏவுதலை நிறுத்தியது. பின்னர், இந்த செயற்கைக்கோள்களை தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என்று
இந்த நாடுகள் இங்கிலாந்து அரசிடம் உத்தரவாதம் கோரியது.

ஒன்வெப் நிறுவனத்தின் செயல் தலைவர் சுனில் பார்தி மிட்டல் கூறுகையில், எங்களுக்கு சரியான நேரத்தில் இந்தியா உதவியது. ரஷ்யா-உக்ரைன் போரில் எங்களுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ரஷ்யாவுடன் 6 ஏவுதல்களுக்கான ஒப்பந்தம் போட்டப்பட்டது. இப்போது, ​​OneWeb பணத்தைத் திரும்பப் பெறுவதற்குப் போராடுவது மட்டுமல்லாமல், 36 செயற்கைக்கோள்களையும் இழந்துவிட்டது. அதோடு 1 வருட காலம் வீணாகி விட்டது என்றார்.

வணிக ரீதியான ஏவுதல்களை அதிகரிக்க இந்தியா திட்டம்

இந்தியா ஒன்வெப்பை தொடர்ந்து வணிக ரீதியான ஏவுதல்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஒன்வெப் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. 2030-ம் ஆண்டளவில் வர்த்தக சந்தையில் இந்தியாவின் 2% பங்கை 10% ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இன்றுவரை, இஸ்ரோ குறைந்தது 36 நாடுகளில் இருந்து 384 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது. குறைந்தது 10 பிரத்யேக வணிக பயணங்கள் மற்றும் பல இந்திய பயணங்கள் அவை இணை பயணிகள் செயற்கைக்கோள்களாக கொண்டு செல்லப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான வணிகரீதியான இந்த வெளியீடுகள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களால் செய்யப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: With oneweb how the agency is firming up its reputation in commercial launches

Best of Express