உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்ல வேண்டுமானால், இங்கிலாந்து அணியை 287 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும், இது சாத்தியமில்லை என்பதால் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பயிற்சி அமர்வின் போது பாகிஸ்தானின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அந்த அணியுடன் பேசினார்.
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியது.
ட்ரெண்ட் போல்ட் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு தாக்குதலில் இலங்கை அணியை நிலைகுலையச் செய்து 171 ரன்களுக்குள் சுருட்டியது. 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் வலுவான கூட்டணி அமைத்து விளையாடி மிக எளிதாக சேசிங் செய்ய வழி வகுத்தனர்.
நியூசிலந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தியது. இதனால், இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்லுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று நவம்பர் 15-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் பெரிய வெற்றியால் பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்புகள் குறைந்துவிட்டதை அறிந்து இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை எதிர்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைவார்கள். பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளப் போகிறது. பாகிஸ்தான் அணி அரை இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் 8 புள்ளிகளுடன் 4வது மற்றும் 5வது இடத்தில் இருந்தன. நியூசிலாந்து ஏற்கனவே பாகிஸ்தானை விட சிறந்த ரன் ரேட்டை வைத்துக்கொண்டுள்ளது. இலங்கைக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, நியூசிலாந்து 10 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி மிகப் பெரிய வெற்றியாக இருக்க வேண்டும். அந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கு 2 புள்ளிகளை மட்டுமல்ல, ரன் ரேட் விகிதத்தில் மிகப் பெரிய அளவில் உச்சம் தொட வேண்டும்.
இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் வெல்ல வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யும் போது 287 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது சேஸிங் செய்யும்போது 284 பந்துகளை மிச்சப்படுத்த வேண்டும். அப்போதுதான், பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதிப் போட்டிக்கு நுழைய முடியும்.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடியது. பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட சராசரிக்கும் குறைவாகவே விளையாடியது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வானிலை பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும். இல்லையெனில், 402 ரன்களை சேஸ் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. இது அவர்களின் இந்த உலகக் கோப்பை பயணத்தின் முடிவாக இருக்கும்.
இருப்பினும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணி மிக மோசமாக பரிதாபகரமான நிலையில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மைதானத்திற்குள் நுழையும். ஆனால், அவர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாவிட்டாலும் வெற்றி பெற முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.