இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் அஞ்சலி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 24 மே 1995 அன்று திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு சாரா டெண்டுல்கர் (27), அர்ஜுன் டெண்டுல்கர் (25) ஆகிய மகள் மற்றும் மகன் உள்ளனர். இதில், அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சாளராக தன்னை மேம்படுத்தி வருகிறார்.
அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார். ஐ.பி.எல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் அவரை மும்பை அணி வாங்கியது.
இந்நிலையில், தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் சச்சின் டெண்டுல்கர். அந்த அறக்கட்டளையின் துணை நிறுவனராக அவரது மனைவி அஞ்சலி இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சச்சினின் மகளான சாரவும் தற்போது 'சச்சின் தெண்டுல்கர்' அறக்கட்டளையில் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இதனை சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குனராக எனது மகள் சாரா டெண்டுல்கரும் இணைந்திருப்பதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவ மற்றும் பொது சுகாதார ஊட்டச்சத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். விளையாட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி மூலம் இந்தியாவை மேம்படுத்தும் இந்த பயணத்தை அவர் தொடங்குகையில், உலகளாவிய கற்றல் எவ்வாறு முழு வட்டத்திற்கு வர முடியும் என்பதை நினைவூட்டுகிறது." என்று பதிவிட்டுள்ளார் சச்சின்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.