Shane Warne Tamil News: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே. அந்நாட்டு தேசிய அணிக்காக 1992 ஆம் ஆண்டு அறிமுகமாகிய இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தவர். கிரிக்கெட்டில் மரடோனா, சுழற்பந்து வீச்சில் டான் பிராடுமேன் என்றும், சுழலில் வித்தை காட்டும் மந்திரவாதி என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
அவர் தனது ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளை பகிர்ந்தும் வந்தார். இந்த நிலையில் தான், வார்னே நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு தான் அவரது இறப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேன் வார்னேவின் இந்த திடீர் இறப்பு செய்தி கிரிக்கெட் உலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட்டில் முடிசூடா வலம் வந்த அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வார்னே - வாழ்நாள் சாதனையாளன்
வார்னே இவ்வுலகத்தை விட்டு சென்று இருந்தாலும் அவர் படைத்த சாதனைகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இன்றும் அசைபோட்டு கொண்டுதான் இருக்கிறது. அவரின் திறன், வேகம், மைதானத்தில் அவர் செயல்படும் விதம், பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் பயன்படுத்தும் உத்தி என அனைத்தையும் நாம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தனது அசாத்திய பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு நடுக்கம் கொடுத்த அவரை ஒரு வாழ்நாள் சாதனையாளன் என்றால் நிச்சயம் மிகையாகாது.
வார்னே ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகள் என ஆயிரம் விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய ஒரே ஆஸ்திரேலிய வீரர் ஆவார். 1999ம் ஆண்டு உலக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பிடித்திருந்தார். இந்தியாவில் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல் அணியையும் வழிநடத்திருந்தார். மேலும், அந்த அணி முதல் அணியாக கோப்பை முத்தமிட பல வழிகளில் உழைத்திருந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் வார்னேவுக்கு 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் வழங்கப்பட்டது. 2013ம் ஆண்டும் ஆண்டு ஐசிசியின் கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் என்ற உயர்ந்த அந்தஸ்தும் அவருக்கு கிடைத்தது. 2017ம் ஆண்டு கிரிக்கெட்டர்களின் அல்மனாக் நடத்திய ரசிகர்களின் வாக்கெடுப்பில், கடந்த 40 ஆண்டுகளில் நாட்டின் சிறந்த ஆஷஸ் லெவேன் வீரர் 'ஷேன் வார்னே' தான் என்றும் அவருக்கு பெயரிப்பட்டது.
இப்படி சர்வேதேச கிரிக்கெட் அரங்கில் தனது சுழலால் மாயாஜாலம் செய்த ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னேவின் கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த எட்டு சிறந்த தருணங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
ஷேன் வார்னேவின் கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த 8 சிறந்த தருணங்கள்:
கொழும்பில் மறுபிரவேசம் கொடுத்த வார்னே (1992)
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்த மைக் கேட்டிங் அவரை “Ball of the Century” "நூற்றாண்டின் பந்து" என்று அழைக்கப்படுவதற்கு முன், கொழும்பு மைதானத்தில் வார்னே ஒரு அதிசயத்தை நிகழ்த்தி இருந்தார். இதன் மூலம் கிரிக்கெட் உலகமே அவரை திரும்பி பார்க்கவும் வைத்திருந்தார்.
இலங்கை அணி 181 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை துரத்தியது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் வந்த போது அந்த அணி 127 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆஸ்திரேலியாவின் கிரெக் மேத்யூஸ் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால், வார்னேவோ, தனது கடைசி 13 பந்துகளில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்கமால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இந்த ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி எளிதில் வென்றது.
இதற்கு முன்னதாக நடந்த, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், வார்னே 335 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்தப்போட்டிக்கு பிறகு அவரது விக்கெட் எடுக்கும் திறனில் தொய்வே இல்லை. அவருக்கு ஏறுமுகமாகத்தான் இருந்தது.
இதே ஆண்டு, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் 57 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். இது அவரது ஹோம் கிரவுண்ட் என்பதால் அவருக்கு இரட்டிப்பு மகிச்சி கிடைத்தது. இந்த மைதானத்தில் மட்டும் வார்னே 56 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
WARNE
MCG
1992
FLIPPER pic.twitter.com/oxGuJAuDRD— Rob Moody (@robelinda2) March 5, 2022
தி கேட்டிங் பால், 1993
சுழலில் வித்தை காட்டும் வார்னே தனது திட்டத்தின் படி சரியாக செயல்படக் கூடியவரும் ஆவார். அதை உலகம் அறியும் விதமாக, இங்கிலாந்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் தனது முதல் பந்து வீச்சிலேயே விக்கெட் எடுத்து மிரட்டினார். இம்முறை அவர் சுழல் வலையில் சிக்கியவர் இங்கிலாந்து அணியின் மைக் கேட்டிங்.
வார்னே அவருக்கு வீசிய பந்தை வலது கை குறுக்கே டிரிஃப்ட் செய்தார், அதை டிப் செய்து, பிட்ச் அவுட் லெக், பேட் அடித்து ஆஃப்-ஸ்டம்பின் மேற்பகுதியை கிளிப் செய்யும் அளவுக்கு சுழற்றினார். அவர் நினைத்தது போலே பந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இந்த அதிர்ச்சியை கேட்டிங்கின் கலங்கிய முகமே வெளிப்படுத்தி இருந்தது.
1993
Shane Warne magic
Simply brilliant pic.twitter.com/IovEy7ynWX— Rob Moody (@robelinda2) March 5, 2022
தி ஹாட்-ட்ரிக், 1994-95
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் 71 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய வார்னே அணியின் வெற்றியையும் உறுதி செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து MCG இல் நடந்த ஆட்டத்தில், இங்கிலாந்தின் பில் டிஃப்ரீடாஸ், டேரன் கோஃப் மற்றும் டெவோன் மால்கம் ஆகியோரை தொடர்ந்து தான் வீசிய மூன்று பந்துகளில் காலி செய்து, தனது புகழ்பெற்ற ஹாட்ரிக் சாதனையைப் பெற்றார். இந்த தொடரின் முடிவில் அவர் மட்டும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
உலகக் கோப்பையில் ஹீரோயிசம் 1999
1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற வார்னே, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த பேருதவியை ஆற்றி இருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் அவர் தனது முதல் மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டம் ட்ரா ஆகி இருந்தாலும், அவர் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்ல உதவினார். மேலும், அவர் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தி இருந்தார்.
பாகிஸ்தான், 2002
இந்த தொடர் வார்னின் ஆதிக்கத்திற்கு அடிக்கடி மறக்கப்படும் உதாரணம். வரலாற்றில் மிகவும் பக்கச்சார்பான அந்த தொடரில், வார்ன் 12.66 சராசரியில் 27 விக்கெட்டுகளை எடுத்தார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் தொடரில் அவருக்குக் கிடைத்த விக்கெட்டுகளில் கிட்டத்தட்ட பாதியை எடுத்தார் மற்றும் ஷார்ஜாவில் இரண்டு நாட்களில் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டியை முடிக்கவும் உதவினார்.
ஒன் மேன் பேண்ட், 2005
வார்னேவின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஆஸ்திரேலிய அணி முதல் முறை ஆஷஸ் தொடரில் தோல்வியுற்ற தருணம் அது. அப்போது அந்த அணியின் நட்சத்திர வீரரான க்ளென் மெக்ராத் காயத்துடன் உள்ளேயும் வெளியேயும் இருந்த வண்ணம் இருந்தார். இதனால், வார்னே பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்த வேண்டிய காட்டயத்திற்கு ஆளானார்.
இந்தத் தொடரில் அவர் 19.92 சராசரியில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஒரு ஆஸ்திரேலிய வீரரின் அதிகபட்ச விக்கெட்டாகும்.
700வது விக்கெட், 2006-07
2006-07ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த நாட்களில் தான் வார்னே தனது ஓய்வை அறிவிக்கவும் இருந்தார். அதற்கு முன்னதாக நடந்த இந்த தொடரில் தனது சுழலால் சரியான பிரியாவிடை கொடுத்தார் என்றே சொல்லலாம். இப்போட்டிக்கு முன்னர் வரை வார்னே 699 விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருந்தார்.
அவரது சொந்த மண்ணில் (MCG) அரங்கேறிய பாக்சிங் டே டெஸ்டில், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் விக்கெட்டை அவர் வீழ்த்தியதன் மூலம் தனது 700வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்கிற பெருமையையும், சாதனையையும் அவர் படைத்தார்.
தொடர்ந்து நடந்த ஆஷஸ் தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்த வார்னே, அந்த அணி இரண்டாவது முறையாக 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை ஒயிட் - வாஷ் செய்து, ஆஷஸ் தொடரை கைப்பற்ற உதவினார். 1,000 சர்வதேச விக்கெட்டுகளை கடந்த அவருக்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
Shane Warne
A thread of leg spin
🧵 🏏
Test debut vs India, 1st over pic.twitter.com/k5Twd2QKvB— Rob Moody (@robelinda2) March 4, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.