Virat kohli Tamil News: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்கிற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி ருசிக்கும் அணி தொடரை கைப்பற்றும்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர் கோலி அடித்த ஸ்கோரை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கணித்து ஷாக் கொடுத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி, ஓவல் மைதானத்தில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இடுப்புவலி காரணமாக களமிறங்கவில்லை. தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் அய்யருக்கு பதில் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் கோலி 25 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
முன்னதாக, ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இரவு 10 மணிக்கு விராட் கோலி இறங்கும் முன்பே 25 பந்துகளில் கோலி 16 ரன் என்று ட்வீட் செய்தார். அதேபோல், கோலியும் சரியாக 25 பந்துகளில் 16 ரன்களில் அவுட் ஆனார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், கோலியின் ஸ்கோர் இப்படி கணிப்படுவது ஒன்றும் இது முதல் முறையல்ல. இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் கோலியின் ஸ்கோர் என்ன? அவர் எப்படி அவுட் ஆவார்? என்பதை ஒரு ரசிகர் மிகச்சரியாக கணித்திருந்தார். மற்றொரு முறை கோலியின் ஸ்கோரை ரசிகர் ஒருவர் சரியாகக் கணிக்க, அதை முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் ஆச்சரியம் தாங்காமல் பகிர்ந்தும் இருந்தார்.
Kolly 16 (25) incoming 👍
— Sunil (@Hitting_Middle) July 14, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil