Brazilian football player Pele| தனது கால்பந்து விளையாட்டின் மூலம் உலகையே காதலிக்க வைத்த முதல் உலக நட்சத்திரமான பீலே வியாழக்கிழமை நள்ளிரவில் தனது 82வது வயதில் காலமானார். உலகம் பீலே அல்லது ராஜாவை இழந்தது, அவருடன் சேர்ந்து கால்பந்தும் கொஞ்சம் உயிரிழந்தது. பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள அவரது சொந்த ஊரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீலே கால்பந்து உலகின் கடவுள், ஜாம்பவானாக போற்றப்படுகிறார். 3 முறை உலகக் கோப்பையை வென்றவர்.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். ஆனால் அப்போதும் அவரின் சிரிப்பு பிரகாசமாக இருந்தது.
இறந்தது பீலே அல்ல என எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ கூறினார். பீலே எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினார் – அவர் எப்போதும் தன்னை மூன்றாவது நபரில் குறிப்பிடுகிறார். அவர் ஒருமுறை தனது சுயசரிதையின் இணை ஆசிரியரான அலெக்ஸ் பெல்லோஸிடம் கூறுகையில், “பீலே”: “எட்சன் உணர்வுகளைக் கொண்டவர், குடும்பம், கடினமாக உழைக்கும் நபர் எனக் கூறினார். பீலே இறக்கவில்லை. பீலே ஒருபோதும் இறக்க மாட்டார். பீலே என்றென்றும் நம்முடன் இருப்பார். ஆனால் எட்சன் ஒரு நாள் இறக்கப் போகிற ஒரு சாதாரண மனிதர் என்று குறிப்பிட்டார்.
பீலேவின் புனைப்பெயர் சட்டென்று நினைவுக்கு வந்தது. பீலேவின் முதல் புனைப்பெயர் “டிச்சோ” – அவரது மாமா வைத்த பெயர். அவரது தாயாரும் இறக்கும் அவரை அப்படியே அழைத்தார். பின்பு பள்ளி பருவத்தில் ஒரு சிறுவன் அவரிடம் உனக்கு பிடித்த கால்பந்து வீரர் யார் எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், உள்ளூர் கிளப்பின் கோல்கீப்பரான “பைல்” என்றார். ஆனால் அந்த சிறுவனுக்கு “பைல்” என்று கேட்டுள்ளது. அது விரைவில் பீலே ஆனது. அது அப்படியே நிலைத்தது. அர்த்தமற்ற வார்த்தை கால்பந்தில் மிகவும் அர்த்தமுள்ளதாக மாறியது.
இந்த பெயர் அழியாது. அவர் அழகுபடுத்திய விளையாட்டைப் போல் நிலையானது. சூரியன் மற்றும் நட்சத்திரங்களைப் போல உலகளாவிய பெயர். உண்மையில், அவர் கால்பந்து உலகில் கடவுளாக இருக்கிறார். சூரியனாக இருக்கிறார், ஒளியையும் வாழ்க்கையையும் பரப்புகிறார். 1,279 கோல்கள் அல்லது 1,284 , 92 ஹாட்ரிக் கோல்கள், 3 உலகக் கோப்பைகள்,
நூற்றுக்கணக்கான பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வாங்கி குவித்தவர். கால்பந்து மைதானத்தில் பீலேவின் மேஜிக் வியப்பானது. இப்போதும் நினைவுகளாக உள்ளன.
இன்றைய உலகின் பெரும்பாலானோர் அவர் விளையாடியதைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் அன்றைய காலத்தில் நிகழ்த்தியது பெரும் சாதனைகளை. 1971-ம் ஆண்டு கால்பந்தில் இருந்து பீலே ஓய்வு பெற்றார். பீலே 1958, 1962 மற்றும் 1970 ஆண்டுகளில் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்தார். பீலே. உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசிலுக்காக அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 12.
உலக கால்பந்து உணர்வை உலுக்கிய கோல் அது. 17 வயது சிறுவனான பீலே பிரேசிலுக்கு உலகக் கோப்பை விளையாடி போது, பந்தை தன் தலைக்கு மேல் கொண்டு சென்று ஸ்வீடன் கோல்கீப்பரைத் தாண்டி பந்தை கோல் பெற திருப்பி அடித்தார். இந்த அறிமுக ஆட்டத்தில் உலகைகே திருப்பி பார்க்க வைத்தார். அதைத் தொடர்ந்து அவரது கோல் மழைகள் பொழிந்தன.
பீலே எப்போதும் தனது விளையாட்டை ஒரு பாடல் என்று கூறுவார். அது போல் அவர் பாடல்களும் எழுதியுள்ளார். “பீலே கிங்கா” என்ற ஆல்பத்தையும் வெளியிட்டார். தனது 20 வயதில், அவர் ஜூடோ மற்றும் கராத்தே இரண்டிலும் நிபுணராக இருந்தார். அவர் தனது 70 வயதிலும் நோக்கியா, மாஸ்டர்கார்டு, கோகோ கோலா போன்ற முன்னணி நிறுவன விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
கால்பந்து உலகின் ‘கறுப்பு முத்து’ பீலே உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மட்டுமல்ல கால்பந்து உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள், தலைவர்கள் பீலே இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.