கிரிக்கெட் விளையாடிய போது நிகழ்ந்த சோகம்! நண்பர்கள் கண் முன்னே உயிரிழந்த கல்லூரி மாணவர்

பந்து அவர் நெஞ்சுப் பகுதியில் பலமாக தாக்கியதில் சரிந்து விழுந்திருக்கிறார்

By: February 20, 2019, 10:55:45 AM

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய போது,  பந்து நெஞ்சில் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் ஆர் ஸ்ரீனிவாசன், குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார்.  கடந்த ஞாயிறன்று மாலை 5 மணியளவில் தனது நண்பர்களுடன் ஆதனூர் ஏரியில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பந்து அவர் நெஞ்சுப் பகுதியில் பலமாக தாக்கியதில் சரிந்து அங்கேயே விழுந்திருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது நண்பர்கள், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, ஸ்ரீனிவாசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:21 year old college boy died hitting by ball while played cricket chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X