ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்டில் நடைபெறும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்திய ஓபன் பிரிவு மற்றும் மகளிர் அணிகள் முறையே ஸ்லோவேனியா மற்றும் அஜர்பைஜான் அணிகளை எதிர்கொண்டு இந்திய செஸ் வரலாற்றில் முதல்முறையாக 2 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: Chess Olympiad 2024 Round 11 Live Updates: Gukesh and Co, Harika and Co make it a historic day for Indian chess; clinch both gold medal events
ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்டில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி ஓபன் பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்தது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவிற்கு எதிராக அபார வெற்றி பெற்ற பிறகு, சௌகரியமான நிலையில், இந்தியா இறுதிச் சுற்றில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தது. டி குகேஷ், அர்ஜுன் எரிகாசி மற்றும் ஆர். பிரக்ஞானந்தா ஆகியோர் 11-வது மற்றும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடினார்கள். விதித் குஜராத்தி 4-வது போர்டில் போட்டியை டிரா செய்தார். குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, விதித் மற்றும் ஹரிகிருஷ்ணா ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, மதிப்புமிக்க அணியாக இந்திய செஸ் வரலாற்றில் இந்தியா முதல்முறையாக தங்கம் வென்றது.
பெண்களுக்கான போட்டியில், ஹரிகா தலைமையிலான இந்திய மகளிர் செஸ் அணி அஜர்பைஜானுக்கு எதிராக 3.5 - 0.5 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது. கஜகஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையேயான முடிவுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது, அது டிராவில் முடிந்ததும், அது இந்தியாவுக்கு இரட்டை தங்கத்தை உறுதி செய்தது.
புடாபெஸ்ட் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இரண்டு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றது, இந்திய சதுரங்கத்தின் மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இந்த ஆண்டு இடம்பெறுகிறது. இந்திய செஸ் வரலாற்றில் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா 2 தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“