இப்படியொரு சாதனையை இனிமேல் யாராவது கிரிக்கெட்டில் நிகழ்த்த முடியுமா என்று தெரியவில்லை. அப்படியொரு மெகா சாதனையை செய்து காட்டியிருக்கிறார் நேபாள் கிரிக்கெட் வீராங்கனை அஞ்சலி சந்த்.
மாலத்தீவு அணிக்கு எதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாள் விளையாடியது. இதில், முதலில் ஆடிய மாலத்தீவு அணி, 10.1 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
2, 2019
நேபாள் அணியின் 24 வயது ஸ்பின் பந்து வீச்சாளர் அஞ்சலி சந்த், வெறும் 13 பந்துகள் மட்டுமே வீசி, ஒரு ரன்கள் கூட விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை அள்ளி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
இந்த மூன்று பேட்ஸ்வுமன்கள் கோல்டன் டக் என்பது குறிப்பிடத்தக்கது.
2, 2019
சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில், சமீபத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில், இந்திய பவுலர் தீபக் சாஹர், 7 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.
ஆனால், பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு படி மேல் சென்று, ரன்னே கொடுக்காமல் 6 விக்கெட்டை அள்ளியிருக்கிறார் அஞ்சலி சந்த்.