/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project26-1.jpg)
Lionel Messi
கால்பந்து நாயகன், அசுரன், ஜாம்பவானாக இருக்கும் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமிக்காக
எம்.எல்.எஸ்-ல் முதல் முறையாக விளையாடினார். அறிமுக ஆட்டத்திலேயே மறக்க முடியாத விளையாட்டை வெளிப்படுத்திய மெஸ்ஸி, கடைசி நிமிட ஃப்ரீ கிக்கை விளாசி அணியை வெற்றி பாதைக்கு திருப்பினார். லீக் கோப்பையில் தனது அணிக்கு க்ரூஸ் அசுலுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றார்.
இண்டர் மியாமிக்காக முதல் முறையாக அறிமுகமாகிய மெஸ்ஸி, மாற்று வீரராக அறிமுகப்படுத்தப்பட்டார். களத்தில் இறங்கி உடனேயே தாக்கத்தை ஏற்படுத்தினார், பல வாய்ப்புகளை உருவாக்கினார்.
ஆட்டத்தின், 94 வது நிமிடத்தில், மெஸ்ஸி மீண்டும் தனது மேஜிக்கை உருவாக்கி, பெனால்டி பகுதிக்கு சற்று வெளியே ஃப்ரீ கிக்கில் கோல் அடிக்க முன்னேறினார். அவரது புகழ்பெற்ற ஆட்டம் இடது பாதத்தைப் பயன்படுத்தி, மெஸ்ஸி பந்தை வலையின் மேல் மூலையில் சுருட்டி, இன்டர் மியாமிக்கு வெற்றியைக் கொடுத்தார்.
Lays with 808 goats to celebrate Messi’s 808 goals pic.twitter.com/CPrCJkDWAx
— MC (@CrewsMat10) July 22, 2023
இந்த கோல் அடித்தன் மூலம் மெஸ்ஸி ப்ரோஃவல்னல் விளையாட்டு வீரராக 808 கோல்களை அடித்துள்ளார். இதையடுத்து மெஸ்ஸியின் சாதனையைக் கொண்டாட லேஸ் நிறுவனம் 808 ஆடுகளைப் பயன்படுத்தி மெஸ்ஸி உருவத்தை உருவாக்கியது.
லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமிக்காக எம்.எல்.எஸ்-ல் அறிமுகமானது, அவர் ஏன் எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார் என்பதை நினைவூட்டுவதாக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.