New Update
/indian-express-tamil/media/media_files/6jZDu1ixwOMvnGSYQEpV.jpg)
2024 டி 20 உலகக் கோப்பையின் அடிப்படைகள் குறித்து தனது மகள்களிடம் வினா எழுப்பிய மற்றொரு வீடியோவையும் ஆர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
/
2024 டி 20 உலகக் கோப்பையின் அடிப்படைகள் குறித்து தனது மகள்களிடம் வினா எழுப்பிய மற்றொரு வீடியோவையும் ஆர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் புதன்கிழமை இன்ஸ்டாகிராமில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை குறித்து தனது மகள்களுடன் வேடிக்கையான அரட்டையைப் பகிர்ந்து கொண்டார். வீடியோ பதிவு செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த போட்டியை தனது மகள்களிடம் அஸ்வின் கேட்டார்.
37 வயதான அவர் தனது இளைய மகள் ஆத்யாவிடம், "ஆத்யா, நேற்று என்ன விளையாட்டைப் பார்த்தோம்?" என்றார்.
ஆத்யா முதலில் நெதர்லாந்து vs இங்கிலாந்து போட்டியைப் பார்த்தோம் என்கிறார். பிறகு, அவரும் மூத்த சகோதரி அகிராவும் தங்களைத் திருத்திக் கொண்டு பார்படாஸில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போட்டியைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள்.
Head to head! Cricket is too complicated 😂😂 pic.twitter.com/L2XkRdLGom
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) June 12, 2024
"விளையாட்டில் உங்கள் முக்கிய சந்தேகம் என்ன" என்று ரவிச்சந்திரன் அஷ்வின் ஆதியாவிடம் கேட்கிறார். அபபோது, ஆஸ்திரேலியாவில் எத்தனை தலைகள் உள்ளன என்று நான் உங்களிடம் கேட்டேன்," என்று அவர் கூறுகிறார்.
இந்த வீடியோ 3.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 26,000 க்கும் மேற்பட்ட 'லைக்குகளையும்' பெற்றுள்ளது. ஆர் அஸ்வின் பிரித்தி நாராயணன் என்பவரை மணந்துள்ளார். டி20 உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.