Advertisment

சிஎஸ்கே அணியின் 11 வீரர்கள் யார்? பிரபல கிரிக்கெட் வீரர் கணிப்பு

11 ஓவர்கள் முடிந்த தருவாயில், விக்கெட் எதுவாக இருந்தாலும்,  எம்.எஸ் தோனி களம் இறங்க வேண்டும்

author-image
WebDesk
Sep 09, 2020 21:15 IST
சிஎஸ்கே அணியின் 11 வீரர்கள் யார்? பிரபல கிரிக்கெட் வீரர் கணிப்பு

csk squad for ipl 2020

இந்திய அணியின் ஒப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய  ஆகாஷ் சோப்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஐடியல் 11 வீரர்கள் பட்டியலை யூடியூப் சேனலில்   வெளியிட்டார்.

Advertisment

ஐ.பி.எல் போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆகாஷ் சோப்ரா கணித்த பெஸ்ட் 11 காம்பினேஷன்:   ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஃபாஃப் டூ பிளெசிஸ், கேதார் ஜாதவ், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

“எம்.எஸ். தோனி 5 வது இடத்தில் களம் இறக்கப்படவேண்டும். 10-11 ஓவர்கள் முடிந்த தருவாயில் எந்த விக்கெட்டில் இருந்தாலும்,  எம்.எஸ் தோனி களம் இறங்க வேண்டும் என்பது தான் எளிய விதி" என்று ஆகாஷ் சோப்ரா தனது பேட்டியில் தெரிவித்தார்.

மிட்செல் சான்ட்னர், சாம் கர்ரன் ஆகியோர்  ஆகாஷ் சோப்ராவின் ஐடியல் வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா  விலகினார். சொந்த காரணங்களால் ரெய்னா நாடு திரும்பியுள்ளதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
#Ipl #Ipl News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment