/indian-express-tamil/media/media_files/mlJKBzx1PR8ZVAQt5rR5.jpg)
ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
Ipl-2024-auction: 10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) துபாயில் நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர்.
இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள். இவர்கள் மொத்தம் ரூ.230 கோடியே 45 லட்சத்திற்கு விற்கப்பட்டனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
அதிருப்தி
இந்நிலையில், இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்சை அதிக தொகை கொடுத்து வாங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், ஏலத்தில் நுழைந்தால் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் திறன் கொண்ட விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற திறமையான வீரர்களுக்கு இது நியாயமற்றது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசுகையில், ""மிட்செல் ஸ்டார்க் 14 ஆட்டங்களிலும் விளையாடி, நான்கு ஓவர்களின் முழு ஒதுக்கீட்டையும் வீசினால், ஒவ்வொரு பந்திற்கும் ரூ. 7,60,000 செலவாகும். இது ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர் யார்? ஐ.பி.எல்-லின் சிறந்த பந்துவீச்சாளர் யார்? அவர் பெயர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் 12 கோடி பெறுகிறார், ஸ்டார்க் கிட்டத்தட்ட 25 கோடி பெறுகிறார். அது தவறானது. நான் யாருடைய பணத்தையும் பொருட்படுத்துவதில்லை. அனைவருக்கும் நிறைய சம்பளம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் இது எப்படி நியாயம்?
இது இந்தியன் பிரீமியர் லீக். ஒருவருக்கு இவ்வளவு குறைவாகவும் மற்றவருக்கு இவ்வளவு சம்பளமும் எப்படி கிடைக்கிறது?. விசுவாசம் என்பது ராயல்டி. நாளை பும்ரா மும்பை நிர்வாகத்திடம் 'தயவுசெய்து என்னை விடுவிக்கவும், என் பெயரை ஏலத்தில் கொடுக்க உள்ளேன்' என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்ளவோம் அல்லது கோலி இதையே ஆர்.சி.பி அணியிடம் சொன்னால், அவர்களின் விலை உயரும், இல்லையா? அது எப்படி இருக்க வேண்டும்? இந்த ஏலச் சந்தை ஸ்டார்க்கின் விலை ரூ.25 கோடி என்று முடிவு செய்தால், கோலி ரூ.42 கோடி அல்லது பும்ராவின் விலை 35 கோடியாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யும். அது நடக்கவில்லை என்றால், அதில் ஏதோ தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம்.
இதற்கு ஒரு தீர்வாக வெளிநாட்டு வீரர்களுக்காக செலவிடப்படும் தொகைக்கு வரம்பு வைக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக – ஒரு அணியைச் சேர்ப்பதற்கு உங்களிடம் ரூ. 200 கோடி பர்ஸ் இருந்தால், அதில் 1.5 அல்லது 1.75 இந்திய வீரர்களுக்கும், மீதமுள்ளவை வெளிநாட்டினருக்கும் என ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது நிகழும்போது, முன்பு இல்லாத சமநிலையை உங்களுக்கு வழங்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் ஏற்றத்தாழ்வை உணர முடியும், இது ஒரு நல்ல விஷயம் அல்ல. ஐதராபாத் அணி கம்மின்ஸை கேப்டன்சி விருப்பமாகப் பார்த்தது உறுதி. இல்லை என்றால் ரூ.20.50 கோடிக்கு வாங்குவதில் அர்த்தம் இல்லை. சிறந்த ஐ.பி.எல் சாதனை இல்லாத ஒருவருக்காக அல்ல. அவர் ஒரு சிறந்த வீரர் தான். ஆனால், டி20 போட்டியைப் பொறுத்தவரையில் அவர் 50-50 தான் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது." என்று அவர் கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.