AB de Villiers Tamil News: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிரடி வீரராக வலம் வந்தவர் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். மைதானத்தின் 360 டிகிரிகளிலும் பந்துகளை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டும் இவர் இன்று வெள்ளிக்கிழமை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான டி வில்லியர்ஸ் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இது குறித்து டிவில்லியர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஒரு நம்பமுடியாத பயணம், ஆனால் நான் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
எனது வீட்டில் பின்புறத்தில் எனது மூத்த சகோதரர்களுடன் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலத்தில் இருந்து, எனது விளையாட்டை தூய்மையான மற்றும் முழு இன்பத்துடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடினேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை
கடைசியாக, எனது பெற்றோர்கள், எனது சகோதரர்கள், எனது மனைவி டேனியல் மற்றும் எனது குழந்தைகள் - எனது குடும்பத்தினர் செய்த தியாகங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். எங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நான் உண்மையாகவே முதன்மைப்படுத்த காத்திருக்கிறேன்.
அதே பாதையில் பயணித்த ஒவ்வொரு அணியினருக்கும், ஒவ்வொரு எதிரணிக்கும், ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், ஒவ்வொரு பிசியோ மற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு நான் நெகிழறேன்.
கிரிக்கெட் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தது. டைட்டன்ஸ், அல்லது புரோட்டீஸ், அல்லது RCB, அல்லது உலகம் முழுவதும் விளையாடினாலும், விளையாட்டு எனக்கு கற்பனை செய்ய முடியாத அனுபவங்களையும் வாய்ப்புகளையும் அளித்துள்ளது, நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.
Last, I am aware that nothing would have been possible without the sacrifices made by my family - my parents, my brothers, my wife Danielle and my children. I look forward to the next chapter of our lives when I can truly put them first.
— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021
தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2004ம் ஆண்டு அறிமுகமான டி வில்லியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் 8765 ரன்களும் 228 ஒருநாள் போட்டிகளில் 9577 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1672 ரன்களும், மற்றும் 184 போட்டிகளில் 5162 ரன்களும் குவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி குறித்து பேசிய டி வில்லியர்ஸ், "இது ஆர்சிபி அணி உடனான மறக்கமுடியாத பயணம். வாழ்நாள் முழுவதும் ரசிக்க தனிப்பட்ட முன் பல நினைவுகள் உள்ளன. ஆர்சிபி அணி எப்போதும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும். மேலும் இந்த அற்புதமான அணிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. நான் என்றென்றும் ஆர்சிபியன்,” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் அந்த அணிக்காக 156 போட்டிகளில் விளையாடி 4,491 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்தவர்களில் அவர் இரண்டாவது வீரராக உள்ளார். மற்றும் ஆர்சிபி அணி வரலாற்றில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக (2015 இல்) 133* ரன்களும், குஜராத் லயன்ஸுக்கு (2016 இல்) எதிராக 129* ரன்களும் எடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வீரராக உள்ளார்.
Cricket has been exceptionally kind to me. Whether playing for the Titans, or the Proteas, or RCB, or around the world, the game has given me unimagined experiences and opportunities, and I will always be grateful.
— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021
டி வில்லியர்ஸ் படைத்த சாதனைகள்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர்களில் ஏபி டி வில்லியர்ஸ் முதன்மையானவராக இருக்கிறார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) அதிவேகமாக 7000 ரன்களை எட்டிய வீரர்களில் ஒருவர் ஏபி டி வில்லியர்ஸ்.
ஒரு நாள் போட்டிகளில் 16 பந்துகளில் 50 ரன்கள், 31 பந்துகளில் 100 ரன்கள், 64 பந்துகளில் வேகமாக 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்துள்ளார்.
எங்கு பந்து வீசினாலும், அடித்து நொறுக்கும் வல்லமை படைத்தவராக இருப்பதால் ரசிகர்கள் அவரை மிஸ்டர் 360 என்று அழைக்கிறார்கள்.
டி வில்லியர்ஸ் ஒரு விக்கெட் கீப்பராக டெஸ்ட் மற்றும் ஒரு நாளில் 185 மற்றும் 145 டிஸ்மிஸ்களை செய்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல ஆண்டுகளாக முதல் 5 இடங்களுக்குள் ஆதிக்கம் செலுத்திய வீரர்களில் டி வில்லியர்ஸும் ஒருவர்.
இவர் 278 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் கூட அவருக்கு பந்து வீச பயப்பட்டதாக தெரிவித்து இருக்கிறார். மேலும், மேட்ரிக்ஸ் படத்தில் வரும் நியோ -விற்கு சமமாக அவரை ஒப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர்கள் கூட ஏபி டி -யின் விக்கெட்டை வீழ்த்த ஒரு கால கட்டத்தில் திணறியது உண்டு.
கிறிஸ் கெயிலுடன் இணைந்து கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்களை பறக்க விட்ட வீரர் (37 சிக்ஸர்கள்) என்ற சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்துள்ளார்.
“I’m going to be an RCBian for life. Every single person in the RCB set-up has become family to me. People come & go, but the spirit & the love we have for each other at RCB will always remain. I’ve become half Indian now & I’m proud of that.” - @ABdeVilliers17 #ThankYouAB pic.twitter.com/5b6RUYfjDY
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 19, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.