16 வயது சச்சினுக்கு பாகிஸ்தான் லெஜண்ட் கொடுத்த ஆஃபர்! ரிசல்ட் 3 மெகா சிக்ஸ்! (வீடியோ)

காட்சிப் போட்டி ஒன்றில், 16 வயது இளம் வீரனாக இருந்த சச்சின் டெண்டுல்கரை சிக்ஸ் அடிக்க காதிர் ஊக்குவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

காட்சிப் போட்டி ஒன்றில், 16 வயது இளம் வீரனாக இருந்த சச்சின் டெண்டுல்கரை சிக்ஸ் அடிக்க காதிர் ஊக்குவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Abdul Qadir asked Sachin Tendulkar to hit him for sixes - 16 வயது சச்சினுக்கு பாகிஸ்தான் லெஜண்ட் கொடுத்த ஆஃபர்! ரிசல்ட் 3 மெகா சிக்ஸ்! (வீடியோ)

Abdul Qadir asked Sachin Tendulkar to hit him for sixes - 16 வயது சச்சினுக்கு பாகிஸ்தான் லெஜண்ட் கொடுத்த ஆஃபர்! ரிசல்ட் 3 மெகா சிக்ஸ்! (வீடியோ)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அப்துல் காதிர் நேற்று(செப்.6) மாரடைப்பு காரணமாக லாகூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்டுகளில் விளையாடி 236 விக்கெட்டுகளும், 104 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 132 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

Advertisment

1987-ம் ஆண்டு லாகூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். 1983 மற்றும் 1987-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்தார்.

16 வயதான சச்சின் டெண்டுல்கர் ஒரு காட்சிப் போட்டியில் அப்துல் காதிரின் பந்துவீச்சில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசியது மறக்க முடியாத நிகழ்வாகும்.

இந்நிலையில், காட்சிப் போட்டி ஒன்றில், 16 வயது இளம் வீரனாக இருந்த சச்சின் டெண்டுல்கரை சிக்ஸ் அடிக்க காதிர் ஊக்குவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

இதுகுறித்த காதிர் ஒரு பேட்டியில் கூறுகையில் "இது சர்வதேச ஒருநாள் போட்டி அல்ல. ஆகையால், எனது அடுத்த ஓவரில் நீ சிக்ஸ் அடிக்க முயற்சி எடுக்க வேண்டும். அப்படி நீ அடித்துவிட்டால், நிச்சயம் நீ ஒரு ஸ்டாராகி விடுவாய் என்றேன். அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை, ஆனால் அடுத்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார்" என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Sachin Tendulkar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: