ஆர்ப்பரித்த ஐஸ்வர்யா, ஆராத்யா: களை கட்டிய புரோ கபடி செமி ஃபைனல் காட்சிகள்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உரிமையாளர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அணியின் வெற்றியைக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Abhishek Bachchan, Aishwarya, Aaradhya celebrating Jaipur Pink Panthers victory Tamil News
Aaradhya, Aishwarya Rai Bachchan turn the loudest cheerleaders for Abhishek Bachchan's team Jaipur Pink Panthers at Pro Kabbadi league Tamil News

Jaipur Pink Panthers vs BENGALURU BULLS; Abhishek Bachchan , Aaradhya, Aishwarya Rai Bachchan Tamil News: 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் மும்பையில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 49-29 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அபிஷேக் பச்சன் அணியின் வெற்றியை கொண்டாடிய ஐஸ்வர்யா ராய், ஆராத்யா பச்சன், நவ்யா

பாலிவுட் பட உலகில் முன்னணி நட்சத்திர தம்பியாக வலம் வருபவர்கள் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா. இந்த ஜோடி கடந்த 2007ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு மகள் ஆராத்யா 2011ல் பிறந்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வரும் அபிஷேக் பச்சன், கடந்த 2014 ஆம் ஆண்டில் அறிமுகமான புரோ கபடி தொடருக்கான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வாங்கினார். இந்த அணி அறிமுக தொடரிலே சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பிறகு, பெரிய அளவில் சோபிக்கதாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தொடரின் 4வது சீசனில் பிளே-ஆஃப் சுற்று வரை சென்றது.

இந்த நிலையில், நடப்பு சீசனில் நேற்று நடந்த அரையிறுதியில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்.

இந்த அரையிறுதி போட்டியின் போது ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் பேத்தி நவ்யா நவேலி நந்தா போன்ற பிரபலங்கள், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அணி வீரர்களை போட்டியின் தொடக்கம் முதல் உற்சாகப்படுத்தினர். போட்டியில் அவர்களது அணி அபார வெற்றியை ருசித்து நேரத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து, அணியின் வெற்றியை கொண்டாடினர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தவிர, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அபிஷேக் பச்சன் தனது வெற்றியை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாளை சனிக்கிழமை (17-ம் தேதி) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Abhishek bachchan aishwarya aaradhya celebrating jaipur pink panthers victory tamil news

Exit mobile version