Advertisment

கோலிக்காக மைக்கேல் வாகனுடன் சண்டை செய்த சதீஷ்

நிறைய விளையாடும் நபர் ஒருவர் ஆண்டில் ஒருமுறையேனும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sathish

Sathish

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், அவருக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வான் உள்ளிட்ட கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளநிலையில், அதற்கு எதிர்க்கருத்தும் வெளிவர துவங்கியுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றியுள்ளது.

Advertisment

நடந்துவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், அவருக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட வேண்டும். என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வான் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்தத் தோல்விகள் விராட் கோலியின் தலைமைப் பண்புகளை, தன்னம்பிக்கையை பாதிக்கலாம். இது இந்திய அணியின் உலகக் கோப்பை கனவுக்கு நல்லதல்ல என சில கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வானின் ட்வீட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக, நடிகர் சதீஷ், அன்புள்ள வான் அவர்களே, இந்தத் தோல்வி எங்கள் ஸ்கிப்பர் கோலியை சோர்வடையச் செய்துவிடாது. எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. அவருக்கும் சிறப்பாக இயங்க வேண்டியதன் அவசியம் தெரியும். அதுமட்டுமல்லாது எங்கள் தல தோனி அவருக்கு வழிகாட்ட இருக்கிறார்.அதனால், நீங்கள் உங்கள் வீரர்களுக்கு அறிவுரை சொல்வது நலம். எங்களுக்கு அறிவுரை சொல்லி நேரத்தை விரயமாக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு வான், "சதீஷ்.. நான் ஒரு சிறு அறிவுரையே வழங்கவே செய்தேன்.. விராட் கோலியும் மனிதர் தான். அவருக்கும் சில கவனிப்புகள் தேவைப்படுகிறது" . நிறைய விளையாடும் நபர் ஒருவர் ஆண்டில் ஒருமுறையேனும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது இரண்டு வாரமாவது ஓய்வு எடுக்கலாம். அதுவும் ஆர்சிபி-யால் சரியாக விளையாட முடியாத சூழலில் அவர் எடுத்துக் கொள்ளலாம்என்று பதில் டுவிட் செய்திருந்தார்.

உங்கள் அக்கறையை ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் கோலி மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் போலவே இந்ததோல்வி அவர் உற்சாகத்தைக் குறைக்காது என்றும் நம்புகிறோம். கோலி, வியத்தகு வலிமை கொண்டவர்" என்று அதற்கு மீண்டும் சதீஷ் /பதில் டுவிட்டை பதிவிட்டிருந்தார்.

இவர்களின் இந்த ட்விட்டர் உரையாடலை, பலர் ஆமோதித்தும், எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment