Advertisment

'அவர் மேல க்ரஷ் இருக்கு': ஹர்திக் குறித்து பாலிவுட் நடிகை ஓபன் டாக்

இந்திய ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக ஜூலை 18 ஆம் தேதி அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
Actress Ishita Raj LOVES Hardik Pandya Jasmin Walia Natasa Stankovic Tamil News

தனது சமீபத்திய நேர்காணலில், இஷிதா பேசுகையில், ​​​​ஹர்திக் பாண்டியா மீது க்ரஷ் இருப்பதாகவும், அவரை மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்-ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக ஜூலை 18 ஆம் தேதி அறிவித்தார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3 - 0 என்கிற கண்ணக்கில் வென்ற நிலையில், இந்த தொடரில் ஆடிய ஹர்திக் தனது விடுமுறையை கழிக்க கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். 

Advertisment

கிரீஸில் பிரிட்டனைச் சேர்ந்த பாடகியும், நடிகையுமான ஜாஸ்மின் வாலியா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஒரே இடத்தில் தங்களது விடுமுறையைக் கழித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்தவொரு கருத்தும் வெளியாகவில்லை. 

இந்த சூழலில் தான், ஹர்திக் பாண்டியாவை காதலிப்பதாக பாலிவுட் நடிகை இஷிதா ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமீபத்திய நேர்காணலில், இஷிதா பேசுகையில், ​​​​ஹர்திக் பாண்டியா மீது க்ரஷ் (ஒரு வித ஈர்ப்பு) இருப்பதாகவும், அவரை மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

“அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் ஆல்ரவுண்டர். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும். நான் அவரை காதலிக்கிறேன். அவர் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர், ”என்று பாலிவுட் நடிகை இஷிதா ராஜ் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Hardik Pandya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment