இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு பிடித்தமான வீரர் மகேந்திரசிங் தோனி என்றும், தனக்கு பிடித்தமாக ஐபிஎல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்றும் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கூறியுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆபாச நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஜிஎஸ்எம் 2 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சன்னி லியோன், 2014-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் தமிழில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து இந்தி, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிஸியாக நடித்து வரும் சன்னிலியோன் மலையாளத்தில் ரங்கீலா, தமிழில் வீரமாதேவி, இந்தியில் ஹெலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சன்னி அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தும் வருகிறார்.
அந்த வகையில் சன்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்க் மீ கொஷீன் (AskMeQuestion) பிரிவில் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இதில் ஒரு ரசிகர் உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? ஆம் என்றால் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த சன்னி, தோனியின் படத்தைப் பதிவிட்டு, “நான் வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா” என்று பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் உங்களுக்கு பிடித்த அணி எது என்ற கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்றும் தான் தோனியின் ரசிகை என்றும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை ஐபிஎல் சாம்பியன் படத்தை வென்றுள்ளது.
உங்களைப் பொருத்தவரை அழுத்தமான சூழ்நிலையில் சிறந்த பினிஷர் யார் என்ற கேள்விக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக தோனி வெற்றி சிக்ஸரை அடித்த புகைப்படத்தை பகிர்ந்து பதில் அளித்துள்ளார். கால்பந்து உலகில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸியில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு, இந்திய கால்பந்து அணியின் கேப்டனின் படத்தை வெளியிட்டு நம்முடைய சுனில் சேத்ரி” என்று பதில் அளித்துள்ளார்.
MS Dhoni's influence is unreal pic.twitter.com/EYDNl4w8JQ
— Rohan (@Csk_army1) May 9, 2023
சர்வதேச கால்பந்தில் போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ரொனால்டோ 198 ஆட்டங்களில் 122 கோல்களுடன் முதலிடத்திலும், மெஸ்ஸி 174 போட்டிகளில் 102 கோல்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்திய கால்பந்து சூப்பர் ஸ்டார் சுனில் சேத்ரி இதுவரை 123 போட்டிகளில் 84 ரன்கள் எடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“