worldcup 2023 | india-vs-netherlands | indian-cricket-team | adam-gilchrist: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி எட்டிலும் வெற்றியை ருசித்து அரையிறுதிக்கு வீறுநடை போட்டுள்ளது. முதல் அரையிறுதியில் இந்தியாவை சந்திக்க போவது எந்த அணி என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்நிலையில், இந்தியா அதன் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸி., ஜாம்பவான் ஆலோசனை
இந்நிலையில், இந்திய அணியை வீழ்த்துவதற்கான எளிய வழியை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் ஆலோசனையாக வழங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/9e2f8fbf-231.jpg)
இது தொடர்பாக ஆடம் கில்கிறிஸ்ட் ஃபாக்ஸ் கிரிக்கெட்டிடம் பேசியது பின்வருமாறு:-
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா அவர்களின் வெற்றிகளை எப்படி பெற்றது என்பதை நான் பார்க்கிறேன். சேசிங் செய்வதில் அவர்களுக்கு பலவீனம் இருப்பதாக நான் பரிந்துரைக்கவில்லை. அவர்களின் ரன் -சேஸிற்கு விராட் கோலி ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
ஆனால், இந்திய பந்துவீச்சு தாக்குதல் இரவு விளக்குகளின் வெளிச்சத்தின் கீழ் ஏற்படுத்திய சேதம், அவர்களுக்கு வெற்றியைக் கொண்டு வருகிறது. அந்த சூழலில், சிராஜ், ஷமி மற்றும் பும்ரா ஆகியோரை ஏறத்தாழ யாராலும் விளையாட முடியவில்லை. எனவே தான், பகல் நேரத்தில் அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவர்கள் சுழற்பந்துவீச்சுடன், குறிப்பாக அங்குள்ள சூழ்நிலைகளில்படி, அவர்கள் சற்று அதிக பலத்துடன் இருப்பதை இந்தியா அடையாளம் கண்டுகொண்டது. ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் போட்டியிட விரும்பினால், அவர்கள் வேகப்பந்து வீச்சையும் வலுவாக உருவாக்க வேண்டும். இங்குள்ள எம்.ஆர்.எஃப் (MRF) பேஸ் அகாடமி டெனிஸ் லீலி மற்றும் இப்போது க்ளென் மெக்ராத் ஆகியோர் கண்டிப்பாக இதில் உதவி செய்துள்ளனர் எனலாம்.
வேகப்பந்து வீச்சாளர்களுடன் திறமையான இரண்டு வகையான சுழற்பந்துவீச்சும் அழகாக இணைந்துள்ளதால், இந்தியா நன்கு சமநிலையான பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ளது. ஜடேஜாவின் புள்ளி விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன. குல்தீப் யாதவ் ஒரு வித்தியாசமானவர், இந்த வரிசை எந்த பேட்டிங் வரிசையையும் நிலைகுலைய செய்யும். பின்புலத்தில் ரவி அஸ்வின் அமர்ந்திருக்கிறார். அவர்கள் எப்போதும் சக்திவாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளனர். ஆனால் பந்துவீச்சின் வீரியம் தான் அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“