சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, “சட்ட அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது” என மனுதாரர்கள் வாதிட்டனர்.
மேலும், “பந்தயம் நடத்துவது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விதி எந்த அனுமதியும் வழங்கவில்லை” என்ற குற்றச்சாட்டும் மனுதாரர்கள் முன்வைத்தனர்.
அப்போது போட்டி நடத்தும் தனியார் அமைப்பு, “ஹைதராபாத்தில் கார் பந்தயம் நடத்தியதன் மூலம் அரசுக்கு ரூ.630 கோடி வருவாய் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
சென்னையில் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருந்தது. இந்தப் போட்டிகள் மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கபட்டன.
கார் ரேஸ் போட்டிகள் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து போட்டிகள் டிச.15,16ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“