Advertisment

ஆப்கன் வீரருக்கு தோனி அனுப்பிய கிஃப்ட்: மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய ரஹமத்துல்லா

சென்னை அணியின் கேப்டன் தோனி ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ்-க்கு தனது ஆட்டோகிராஃப் போட்ட சி.எஸ்.கே ஜெர்சியை பரிசாக அனுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Afghanistan Cricketer Rahmanullah Gurbaz  'Gift' CSK Captain MS Dhoni Sent From India

தோனி ஆட்டோகிராஃப் போட்ட சென்னை அணியின் ஜெர்சியுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்.

Chennai Super Kings Captain MS Dhoni  - Afghanistan wicketkeeper-batter Rahmanullah Gurbaz Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற கேப்டனாக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீண்ட காலமாக அவர் வழிநடத்தி வரும் நிலையில், அவரது தலைமையிலான சென்னை அணி நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

Advertisment

நடப்பு சீசனுடன் கேப்டன் தோனி ஓய்வு பெற உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். ரசிகர்கள், வீரர்கள் என பலரும் தோனியிடம் செல்ஃபிகள், ஜெர்சிகள் மற்றும் ஆட்டோகிராஃப்களுக்கு அணுகினர். இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூட ஒரு போட்டிக்குப் பிறகு இரண்டு தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராஃப் கேட்டார்.

publive-image

இறுதிப்போட்டிக்குப் பிறகு அவரது ஓய்வு குறித்து கேட்கப்பட்ட போது, தோனி அது பற்றி முடிவெடுக்க நிறைய நேரம் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதனால் அவர் அடுத்த சீசனிலும் களமாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சென்னை அணியின் நிர்வாகிகளும் தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்று உறுதியளித்துள்ளனர். சமீபத்தில் தனது முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தோனி ஓய்வு எடுத்து வருகிறார்.

தோனி அனுப்பிய கிஃப்ட்

இந்நிலையில், கேப்டன் தோனி ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ்-க்கு தனது ஆட்டோகிராஃப் போட்ட சென்னை அணியின் ஜெர்சியை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த நிலையில், அந்த சிஎஸ்கே ஜெர்சியின் புகைப்படங்களை ரஹ்மானுல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தின் கேப்டசனில் ரஹ்மானுல்லா "இந்தியாவில் இருந்து பரிசுகளை அனுப்பியதற்கு நன்றி தோனி சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

publive-image

ரஹ்மானுல்லா குர்பாஸ் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் நடப்பு சீசனில் 11 போட்டிகளில் 133.52 ஸ்டிரைக் ரேட்டில் 2 அரை சதங்களுடன் 227 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Ms Dhoni Afghanistan Chennai Super Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment