டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதன் விளைவாக இந்தியா மற்றும் வங்கதேசம் உள்ளடக்கிய குரூப் 1-ல் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா சூப்பர் 8-ன் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் இந்திய நேரப்படி இன்று (ஜுன் 23) காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு அஸ்மத்துல்லா, இப்ராஹிம் ஸத்ரான், ரஷித், கரீம் ஜனத், குல்புதீன் நைப் ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கினர். இதில், இப்ராஹிம் ஸத்ரான் 51 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் போல்ட் ஆகி வெளியேறினார். நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரில் அவுட் ஆனார். அடுத்து 3-வது ஓவரில் ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷை அவுட்டாகி வெளியேறினார். வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.
அந்த அணிக்கு மேக்ஸ்வெல் ஆட்டம் மட்டுமே ஆறுதல் அளித்தது. 41 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், கம்மின்ஸ் ஆகியோர் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் குல்புதீன் நைப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முன்னதாக, ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்து அனைவரையும் குழப்பமடைய செய்தார். ஏனெனில் இந்த மைதானத்தில் டாஸ் வென்ற கேப்டன்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்வார்கள் என்று நிபுணர்கள் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“