டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அடுத்தடுத்து அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் உடனான முதல் போட்டியிலும், நியூஸிலாந்து அணியுடனும் தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளுடன் வெற்றி பெற்றாலும், இந்த உலக கோப்பை தொடரில், இந்திய அணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
அதனால், புள்ளிகள் அடிப்படையில், நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியடைந்தால் இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து அணி பலம் வாய்ந்தது என்பதால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று பலரும் ஒரு பலவீனமான நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையேயான போட்டிக்கு நடுவில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ட்வீட் பதிவிட்டார். இந்திய அணியில் மிகவும் தெளிவான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் நம்பிக்கைக்கு எதிராக நம்பிக்கை கொண்டிருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் வெற்றி, அது இந்தியாவின் உலக டி20 வாய்ப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க சாத்தியமில்லை.” என்று பதிவிட்டிருந்தார்.
ஸ்காட்லாந்திற்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு கருத்து தெரிவித்த இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவிடம், நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் தோற்கடிக்கத் தவறினால் இந்திய அணி என்ன செய்யும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நாங்கள் எங்கள் பைகளை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவோம் என்று கூறினார். தற்போது, நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணி டி20 உலக கோப்பையில் அரை இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"