Afghanistan vs New Zealand Test Match Today: நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன. இதற்காக, இரு அணிகளும் இந்தியா வந்துள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று திங்கள்கிழமை தொடங்குவதாக இருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீர் சீக்கிரம் வெளியேற்ற முடியவில்லை. இரண்டு நாட்களும் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை நேரத்தில் மழை பெய்ததால் மைதானம் முழுவதுமாக வறண்டு போகாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: AFG vs NZ Test: After losing 1st 2 days due to wet outfield, what’s the weather forecast for Day 3?
இந்நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த 2-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை என்பதால் இரு அணி வீரர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில், நாளை புதன்கிழமை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வானிலை சூழல் எப்படி இருக்கும்? என்றும், 3-வது நாளிலாவது போட்டி தொடங்க வாய்ப்பு இருக்குமா? என்றும் இங்கு பார்க்கலாம்.
கிரேட்டர் நொய்டா வானிலை எப்படி?
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடக்கும் கிரேட்டர் நொய்டா பகுதியில் வானம் தெளிவாக இருக்கும் என்றும் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும், அக்குவெதர் குறிப்பிட்டுள்ளது. மேலும், "இது போட்டிக்கான டாஸ் போட அனுமதிக்கும். ஆனால், புதன்கிழமை பிற்பகலில் 1 மிமீ இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆட்டத்தை நிறுத்தக்கூடும். இரண்டு நாட்கள் முடிந்துவிட்டதால், சிறிய மழைதத்தூரல் கூட ஆடுகளத்தில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடும்." என்றும் அக்குவெதர் தெரிவித்துள்ளது.
எந்த வசதியும் இல்லாத மைதானம்
முன்னதாக, இடைவிடாத மழை ஆப்கானிஸ்தானின் ஒரு வார பயிற்சி முகாமுக்கு இடையூறாக இருந்தது. அவர்கள் திட்டமிட்ட இரண்டிற்கு பதிலாக ஒரே ஒரு மூன்று நாள் ஆட்டத்தை மட்டுமே ஆட முடிந்தது. மறுபுறம், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இரண்டு பயிற்சி அமர்வுகள் மழை காரணமாக முற்றிலும் கைவிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, அவுட்பீல்டு காரணமாக வழக்கமான பீல்டிங் பயிற்சிகளுக்கு கூட செல்லவில்லை.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த வாரம் மோசமான வடிகால், ஈரமான வெளிப்புற மைதானங்கள் மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய பயிற்சி ஆடுகளம் ஆகியவற்றைப் பற்றி செய்தி வெளியிட்டது.
“எங்கள் முதல் தேர்வு லக்னோ ஸ்டேடியம் மற்றும் இரண்டாவது டேராடூன். எங்கள் கோரிக்கைகளை பிசிசிஐ நிராகரித்தது மற்றும் இரு மாநிலங்களும் அந்தந்த டி20 லீக்குகளை நடத்துகின்றன என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதுதான் ஒரே மைதானம், எங்களுக்கு வேறு வழியில்லை.
நீங்கள் என்னை நம்ப மாட்டீர்கள் ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள மைதானங்களில் இதை விட சிறந்த வசதிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் எங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம், ஆனால் இங்கு ஷாஹிதி குறிப்பிடுவது போல் எதுவும் மாறவில்லை.” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய (ஏ.சி.பி) அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“