Advertisment

AFG vs SL Score, Asia Cup 2023: ஆப்கானிஸ்தான் அதிரடி ஆட்டம் வீண்; 2 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி

ஆசிய கோப்பை தொடரில் இலங்கை ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில், இலங்கை அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. .

author-image
WebDesk
New Update
ஆங்கிலத்தில் படிக்க:- Afghanistan vs Sri Lanka Live Score, Asia Cup 2023

ஆசிய கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதல்

 

Advertisment

Afghanistan vs Sri Lanka Asia Cup 2023 Live Score: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கடைசி லீக் போட்டியில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. 

 ஆங்கிலத்தில் படிக்க:- Afghanistan vs Sri Lanka Live Score, Asia Cup 2023

இந்த பிரிவில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து வங்கதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை சாய்த்தது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும். மாறாக ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும்.

அதனால், ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்வாகும். தற்போதைய சூழலில் இலங்கையின் ரன்ரேட் (+.0.951) வலுவாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் மோசமாக (-1.780) உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர்4 சுற்று அதிர்ஷ்டம் கிட்ட வேண்டும் என்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

டாஸ் வென்ற இலங்கை  பேட்டிங் 

இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 92 ரன்கள் எடுத்தார். ஆப்கான் அணியில் அதிகபட்சமாக குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் வெற்றி இலக்கான 292 ரன்களை எடுத்தால் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையலாம். ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் வெற்றி இலக்கை எட்டவில்லை என்றால் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும். 

இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி அதிரடியாக ஆடி 65 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் அதிரடி ஆட்டம் வீணானது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தில் இலங்கை திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆப்கானிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

ஆங்கிலத்தில் படிக்க:- Afghanistan vs Sri Lanka Live Score, Asia Cup 2023

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

ஆப்கானிஸ்தான்: 

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹாக் பரூக்கி. 

இலங்கை: 

பதும் நிசங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Asia Sport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment