Advertisment

பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஆப்கானிஸ்தான்; இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி

ஆப்கானிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 241 ரன்கள் மட்டுமே சேர்த்த இலங்கை; ரஹ்மத், ஹஸ்மத்துல்லா, ஒமர்சாய் அரைசதம்; 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி

author-image
WebDesk
New Update
Afghanistan vs Sri Lanka Live Score updates World Cup 2023 Pune in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதல்

worldcup 2023 | Afghanistan vs Sri Lanka: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (திங்கள்கிழமை) புனேவில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 30வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. 

Advertisment

டாஸ் வென்ற ஆப்கான் பவுலிங் - இலங்கை பேட்டிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதனால், இலங்கை அணி முதலில் பேட்டிங் களமாடியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்க - திமுத் கருணாரத்ன ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் ஒரு பவுண்டரியை விரட்டிய திமுத் கருணாரத்ன 12 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் பதும் நிஸ்ஸங்க - கேப்டன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஸ்ஸங்க 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

இதன்பிறகு, களத்தில் இருந்த கேப்டன் குசல் மெண்டிஸ் உடன் சதீர சமரவிக்ரம ஜோடி சேர்ந்தார். நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் 3 பவுண்டரியை விரட்டிய குசல் மெண்டிஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த சதீர சமரவிக்ரம 36 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களில் தனஞ்சய டி 14 ரன்னுக்கும், சரித் அசலங்கா 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

துஷ்மந்த சமீரா ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் - மகேஷ் தீக்ஷனா ஜோடி சேர்ந்தனர். இலங்கை அணி 40 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. 

சிறப்பாக விளையாடிய தீக்‌ஷனா 29 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ரஜிதா களமிறங்கிய சிறிது நேரத்தில் மேத்யூஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மதுஷனகா களமிறங்கி ரன் எதுவும் எடுக்காத நிலையில், ரஜிதா 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து இலங்கை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இலங்கை அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூகி 4 விக்கெட்களையும், முஜீப் 2 விக்கெட்களையும், ஒமர்சாய் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்

ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா மற்றும் இப்ராகிம் களமிறங்கினர். ரஹ்மானுல்லா 4 ஆவது பந்தில் டக் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ரஹ்மத் களமிறங்கினார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது.

ரஹ்மத் – இப்ராகிம் ஜோடி நிதானமாக விளையாடியது. இருவரையும் வீழ்த்த முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறினர். இருவரும் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இப்ராகிம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹஸ்மத்துல்லா களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரஹ்மத் அரைசதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிவந்த ரஹ்மத் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹஸ்மத்துல்லாவுடன் ஒமர்சாய் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். இருவரையும் வீழ்த்த முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறினர்.

சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி, அதிரடி காட்டிய ஒமர்சாய் அரை சதம் அடிக்க, சிறிது நேரத்தில் ஹஸ்மத்துல்லாவும் அரை சதம் அடித்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹஸ்மத்துல்லா 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக ஆடிய ஒமர்சாய் 63 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை தரப்பில் மதுஷனகா 2 விக்கெட்களையும், ரஜிதா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில்(வ), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸ்ஹல்ஹா. 

இலங்கை: பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மகேஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீரா, தில்ஷான் மதுஷங்க

நடப்பு உலகக் கோப்பையில் முதல் 3 ஆட்டங்களில் தோல்வி கண்ட இலங்கை அணி அடுத்த இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இங்கிலாந்தை வென்று அசத்தியது. அந்த அணி தற்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணி இரண்டு பெரிய அணிகளுக்கு எதிராக (இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக)  வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, முந்தைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 283 ரன் இலக்கை ஆப்கானிஸ்தான் ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அமர்களப்படுத்தியது. 

இந்த தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றி, 3 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் உள்ள நிலையில், மீதமுள்ள ஆட்டங்களில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

நேருக்கு நேர் 

சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை  - ஆப்கானிஸ்தான் அணிகள் அணிகள் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இலங்கையும், 3-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்திற்கு முடிவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Afghanistan vs Sri Lanka Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment