பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சமீபத்திய தனது யூடியூப் சேனலில் பேசிய போது, "கொரோனா நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடலாம். பாகிஸ்தானுக்காக இந்தியா 10,000 வெண்ட்டிலேட்டர்களைத் தயாரித்துக் கொடுத்தால் ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருப்போம்" என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் லெஜன்ட் கபில் தேவ், "கிரிக்கெட் விளையாட்டை ஏற்பாடு செய்வது என்பது எங்கள் கிரிக்கெட் வீரர்களை ஆபத்தில் ஆழ்த்துவது போன்றது. அது எங்களுக்குத் தேவையில்லை. மூன்று விளையாட்டுகளிலிருந்து நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?. கிரிக்கெட் விளையாட இது நேரமல்ல. விளையாட்டு நாட்டை விட பெரியதாக இருக்க முடியாது" என்றார்.
9 வருடங்களுக்கு முன் தோனி வியந்த 'யார்ரா இவன்' - பால் வல்தாட்டி 'தி டெஸ்டிராயர்'
ஆனால் கபில்தேவ்வின் இந்த கருத்துக்கு ஷஹித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், "உலகமே கொரோனாவை எதிர்த்துச் சண்டையிட்டு வருகிறது, நம் பகுதியில் நம்மிடையே ஒற்றுமை வேண்டும். கபில்தேவின் எதிர்மறையான கருத்துகள் உதவாது. ஷோயப் அக்தர் கூறியதில் நான் எந்தத் தவறையும் காணவில்லை.
கபிலின் எதிர்வினை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரிடமிருந்து இன்னும் நல்லதாக எதிர்ப்பார்த்தேன், இது போன்ற இக்கட்டான தருணத்தில் கபில் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று கருதுகிறேன். விளையாட்டு மனிதர்களை ஒன்று சேர்க்கும் பாலம். கபில் பேச்சு ஏமாற்றமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
அக்தரும் “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கபில் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அனைவருமே பொருளாதார ரீதியாகப் பொறியில் சிக்கப் போகிறார்கள். அதற்காகத்தான் வருவாய் திரட்ட வேண்டும் என்றேன் நான் பரந்துபட்ட பார்வையில், பொருளாதார சீர்த்திருத்தம் பற்றி பேசினேன்.
உலகப் பார்வையாளர்கள் ஒரே போட்டியில் கவனம் செலுத்துவார்கள் இதன் மூலம் வருவாய் உற்பத்தியாகும், ஆனால் கபில் பணம் இருக்கிறது என்கிறார், ஆம் அவருக்குத் தேவையில்லை, ஆனால் மற்றவர்களுக்குத் தேவையில்லையா. எனவே இது விரைவில் பரிசீலிக்கப்படும் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தோனி, கோலியை டார்கெட் செய்கிறாரா கம்பீர்? அந்த சண்டை தான் காரணமோ?
உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி வேதனைப்பட்டுக் கொண்டிருக்க, அக்தர் ஏதோ சர்வ சாதாரணமாக கிரிக்கெட் விளையாடலாம் என்று அழைக்கிறார். இது என்ன வீடியோ கேமில் விளையாடுவது போன்றா? சமூக இடைவெளி என்பதை உலக நாடுகள் அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தி வரும் சூழலில், அக்தர் கிரிக்கெட் விளையாடி நிதி சேர்க்கலாம் என்று கூறுகிறார்.
அதற்கு அப்ரிடியும் 'இதிலென்ன தவறு இருக்கிறது?' என்று கேள்வி எழுப்புகிறார்.
உண்மையில், இவர்கள் புரிந்து தான் பேசுகிறார்களா என்பது ஆச்சர்யமாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.