Ravi Shastri: ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), இந்தாண்டு இதுவரை இல்லாத மோசமான தொடக்கத்தை சந்தித்துள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனில், தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்து, அணி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சனிக்கிழமையன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நான்காவது தோல்வியைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ரவி சாஸ்திரி கூறியதாவது, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலக முடிவு செய்திருந்தால், மெகா ஏலத்திற்கு முன் ஃபாஃப் டு பிளசிஸை சிஎஸ்கே விடுவித்திருக்கக்கூடாது. ஜடேஜாவை சுதந்திரமாக விளையாட அனுமதித்திருக்க வேண்டும். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரை புதிய கேப்டனாகக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
ஜடேஜா போன்ற ஒரு வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். கேப்டனை மாற்றிட சிஎஸ்கே எண்ணியிருந்தால், ஃபாஃப் டு பிளசிஸை தக்க வைத்திருக்க வேண்டும். ஃபாஃப் டு பிளசிஸ் மேட்ச் வின்னர். சென்னை அணியுடன் விளையாடி ஐபிஎல் பட்டத்தை வென்றவர். நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க நபர் என தெரிவித்தார்.
ஐபிஎல் தொடக்க சீசனில் இருந்து தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்தி வந்தார். 12 சீசன்களில் 11 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்று 4 முறை கோப்பை வாங்கிகொடுத்தவர். இந்தாண்டு சீசன் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தோனி அந்த பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் கொடுத்தார். ஆனால், ஜடேஜா ஒருபோதும் மூத்த அணிக்கு கேப்டனாக இருக்கவில்லை. 2007ல் சிறிது காலம் இந்திய அணியை U-19 நாட்களில் வழிநடத்தியது தான் அவர் கடைசியாக கேப்டனாக இருந்த தருணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜாவின் சிறப்பான செயல்பாடை பலர் ஆதரித்திருந்தாலும், தற்போதைய தொடர் தோல்வி சிஎஸ்கே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவரது கேப்டன்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ESPNCricinfo இடம் பேசிய சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி இந்த முடிவை சிறிது காலமாக பரிசீலித்து வருவதாகவும், ஜட்டுவிடம்கேப்டன் பதவியை ஒப்படைக்க இது சரியான நேரம் என்றும் உணர்ந்ததாக தெரிவித்தார். அப்படியானால், CSK அந்த ரோலுக்கு ஃபாஃப்வை தக்கவைத்திருக்க வேண்டும் என்று சாஸ்திரி கூறுகிறார்.
முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் கூறுகையில், தோனி கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க நினைத்திருந்தால், ஃபாஃபுக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஜடேஜா ஒரு வீரராகத் தொடர்ந்திருக்க வேண்டும். அவர் கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாடியிருப்பார். அது, சென்னையின் தற்போதைய நிலையை மாற்றியிருக்கும் என தெரிவித்தார்.
முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன் ஃபாஃப், தற்போது ஆர்சிபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், ஃபாஃப் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். RCB இந்த சீசனில் நான்கு ஆட்டங்களில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.