Asian cup 2023 Final : 16ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை இரண்டாம் இடமும் பிடித்தது.
பாகிஸ்தான் (Pakistan), வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் வெளியேறின. இந்த நிலையில் ஆசிய கோப்பையின் இறுதி போட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடந்தது.
இதில் இந்திய அணி நடப்பு சாம்பியன் இலங்கையை புரட்டி எடுத்தது. இதற்கிடையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, “இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியும் கடும் வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுள்ளனர்.
இந்தத் தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் அசாம் சீனியர் வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, “சூப்பர் ஸ்டார்களாக இருப்பதை கைவிடுங்கள். உலகக் கோப்பையை இழந்தால் யாரும் உங்களை சீண்ட மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு பாபர் அசாம், “போட்டியில் யார் விளையாடினார்கள்? யார் விளையாடவில்லை என்பது எனக்கு தெரியும்” என கோபமாக பேசியுள்ளார்.
அப்போது, முகமது ரிஸ்வான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் பாபர் அசாமை சமாதானப்படுத்தியுள்ளனர். இந்தத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“