Advertisment

தன்னை அறிந்து… தன் பலம் அறிந்து… ரிட்டையர் ஆகி 4 ஆண்டுக்குப் பிறகும் பின் வரிசை பேட்ஸ்மேனாக மிரட்டும் தோனி

41 வயதான தோனி தற்போது ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக (2008ம் ஆண்டு முதல்) வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

author-image
WebDesk
New Update
Ageless MS Dhoni reinvents himself to remain useful in IPL 2023 Tamil News

MS Dhoni in action during Chennai Super Kings' game. (IPL/BCCI)

MS Dhoni  IPL 2023 Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. அவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய 3 வகையான (ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ) உலக கோப்பையையும் கைப்பற்றியது. மேலும் ஏனைய அணிகளால் பதிவு செய்யப்பட ரெக்கார்டுகளையும் தகர்த்தெறிந்துள்ளது.

Advertisment

கடந்த 2004 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி 2019ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 15 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

41 வயதான அவர் தற்போது ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக (2008ம் ஆண்டு முதல்) வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. அவரை ரசிகர்கள் 'தல' தோனி என செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், நடப்பு சீசனில் 8வது இடத்தில் களமிறங்கி மிரட்டல் அடி அடித்து வருகிறார். நேற்று புதன்கிழமை டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக அவர் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அசத்தினார். அது சென்னை அணிக்கு 167-8 ரன்களை எடுக்க உதவியது. அவரது சிறப்பான கேப்டன்சியால் சென்னை அணி குறைந்த ஸ்கோரிங் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் தோனியின் சராசரி 48 ஆக உள்ளது. இது சென்னை அணியில் உள்ள பேட்டர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் வைக்கிறது. மற்றும் அவரது 204-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட் அவரது அணி வீரர்களை விட அதிகமாக உள்ளது.

சென்னை அணியில் உள்ள சக வீரர் ரவீந்திர ஜடேஜா தனது கேப்டனை விட முன்னதாக பேட்டிங் செய்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் அவரது பிரபலத்தின் அளவுகோலாக இருக்கிறது.

"நான் பேட்டிங் செய்யும்போதும் (7வது இடத்தில்), அவர்கள் அவருடைய பெயரை உச்சரிப்பதை என்னால் கேட்க முடிகிறது. நான் அதிகமாக பேட்டிங் செய்தால், அவர்கள் நான் ஆட்டமிழப்பதற்காக பிரார்த்தனை செய்கிறார்கள் (அதனால் அவர்கள் தோனி பேட்டிங்கைப் பார்க்கலாம்)." என்று டெல்லிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Csk Vs Dc Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment