/indian-express-tamil/media/media_files/2025/10/16/cwg-artist-2025-10-16-08-17-40.jpg)
அகமதாபாத்தில் 2036 ஒலிம்பிக் மற்றும் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள இடங்கள் (மைதானங்கள்) எப்படி இருக்கும் என்பதை ஒரு கலைஞர் காட்சிப்படுத்திய படம். Photograph: (Special arrangement)
2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான தனது லட்சியத்தின் ஒரு முன்னோட்டமாக, 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) இந்தியா நடத்தத் தயாராகி வருகிறது. இந்த நூற்றாண்டு விழாப் போட்டிகளை நடத்துவதற்கான இடமாக குஜராத்தின் அகமதாபாத் முன்மொழியப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு, புதன்கிழமை நடந்த கூட்டத்திற்குப் பிறகு, குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தை 'நடத்துவதற்கு முன்மொழியப்பட்ட இடம்' என்று பரிந்துரைத்தது. இந்த முன்மொழிவு, நவம்பர் 26-ம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் பொதுச் சபையின் போது, முழு காமன்வெல்த் விளையாட்டு உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக வைக்கப்படும் என்று காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா கடைசியாக 2010-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. இருப்பினும், டெல்லி விளையாட்டுகள் மோசமான திட்டமிடல், உள்கட்டமைப்பை முடிப்பதில் தாமதங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் சர்ச்சையானது.
லட்சியமான 'வளர்ந்த பாரதம்' இலக்கு:
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) தலைவரான பி.டி. உஷா, நூற்றாண்டு விழாப் போட்டிகளை நடத்துவது நாட்டிற்கு ஒரு 'அசாதாரண கௌரவம்' என்று கூறினார். "இந்தப் போட்டிகள் இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மற்றும் நிகழ்வுத் திறன்களை வெளிப்படுத்துவதுடன், 'விக்சித் பாரத் 2047' நோக்கிய நமது தேசியப் பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள பங்கை வகிக்கும். 2030 போட்டிகள் நம்முடைய இளைஞர்களை ஊக்குவிக்கவும், சர்வதேச கூட்டு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், காமன்வெல்த் நாடுகளிடையே ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்திற்கு பங்களிக்கவும் ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பாக நாங்கள் காண்கிறோம்” என்று அவர் கூறினார்.
ஒலிம்பிக் ஏலத்திற்கான முன்னோட்டம்:
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, இந்தியாவின் 2036 ஒலிம்பிக்ஸ் ஏலத்தை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகக் காணப்படுகிறது.
ஐ.ஓ.ஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், “2030 காமன் வெல்த் விளையாட்டுகளுக்கான (2030 CWG) கட்டுமானக் காலத்தைப் பயன்படுத்தி, இந்தியா ஒரு 'நம்பகமான இடமாக' இருக்க முடியும் என்பதை உலக விளையாட்டு சமூகத்திற்குக் காட்ட திட்டமிட்டுள்ளோம். 2030 காமன் வெல்த் விளையாட்டுகள் (2030 CWG) தொடங்குவதற்கு முன்பே 2036 ஒலிம்பிக்ஸ் நடத்துபவர் அறிவிக்கப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், உலகத் தரத்திலான வசதிகளைச் சரியான நேரத்திலும், வெளிப்படையான முறையிலும் உருவாக்குவதன் மூலம், 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நாங்கள் இப்போது மாறுபட்டவர்கள், லட்சியம் கொண்டவர்கள் மற்றும் முதிர்ச்சியடைந்தவர்கள் என்பதை உலகிற்குக் காட்ட முடியும். கடந்த காலத் தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம்," என்று அவர் தெரிவித்தார்.
போட்டிகள் நடக்கும் இடங்கள்:
2030 காமன் வெல்த் விளையாட்டுகளை (20230 CWG) நடத்த அகமதாபாத்தும், நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவும் மட்டுமே போட்டியில் இருந்தன. செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளால் 2026 காமன் வெல்த் விளையாட்டுகளில் வெறும் 10 விளையாட்டுக்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தப் போட்டிகளை நடத்துவது இந்தியாவுக்கு ஒரு முக்கியமான படியாக அமையும்.
ரூ.825 கோடி செலவில் கட்டப்பட்ட புதிதாகத் திறக்கப்பட்ட நாரன்புரா விளையாட்டு வளாகம், 2030 காமன் வெல்த் விளையாட்டுகளுக்கான முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கும்.
சர்தார் வல்லபாய் படேல் வளாகம் மற்றும் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆகியவை இதனுடன் இணையும்.
பல நகரங்களை உள்ளடக்கிய 2036 ஒலிம்பிக் திட்டத்தைப் போலன்றி, 20230 காமன் வெல்த் விளையாட்டுகள் (2030 CWG) அகமதாபாத் மற்றும், அனேகமாக, காந்திநகரில் மட்டுமே நடத்தப்பட வாய்ப்புள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுக் குழுவின் கருத்து:
“காமன்வெல்த்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவுக்கு ஒரு பெருமைமிக்க விளையாட்டு வரலாறு உள்ளது. 2022 பர்மிங்காம் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது அதன் வெற்றிக்குச் சான்று. அகமதாபாத்தின் முன்மொழிவு, காமன்வெல்த் விழுமியங்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும், நவீன விளையாட்டின் அளவு மற்றும் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் போட்டியை நடத்தக்கூடிய திறனையும் வலியுறுத்துகிறது” என்று நிர்வாகக் குழு மேலும் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.