‘காவ்யா மாறனின் ஆரஞ்சு ஆர்மிக்கு புது கேப்டன் கிடைச்சாச்சு’: அறிவிப்பை வெளியிட்ட சன் ரைசர்ஸ்

ஐ.பி.எல் 2023 தொடருக்கான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதன் புதிய கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் எய்டன் மார்கரமை நியமித்துள்ளது.

Aiden Markram SRH skipper for IPL 2023 Tamil News
The announcement of Aiden Markram's name came on Thursday.

Aiden Markram has been named as SRH captain Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அதன் புதிய கேப்டனை அறிவித்துள்ளது. அதன்படி, அந்த அணியின் கேப்டனாக எய்டன் மார்கரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்க வீரரான எய்டன் மார்க்ரம் கேப்டனாக U-19 உலகக் கோப்பையை வென்றுள்ளார். மேலும், இந்த ஆண்டு முதல் தொடங்கிய தென் ஆப்ரிக்கா (SA20) லீக் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி, அந்த அணி முதல் அணியாக சாம்பியன் பட்டம் உதவினார். எனவே, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும் அவர் சாம்பியன் பட்டம் வெல்ல அழைத்துச் செல்வார் என்று அணி நிர்வாகம் அவரை கேப்டனாக நியமித்துள்ளளது.

ஐ.பி.எல்-ல் கேப்டன்களாக தென் ஆப்பிரிக்க வீரர்கள்:-

ஜேபி டுமினி (டெல்லி டேர்டெவில்ஸ்)
ஃபாஃப் டு பிளெசிஸ் (ஆர்.சி.பி)
டேவிட் மில்லர் (பஞ்சாப் கிங்ஸ்)
ஷான் பொல்லாக் (மும்பை இந்தியன்ஸ்)
ஐடன் மார்க்ரம் (சன் ரைசர்ஸ் ஐதராபாத் )*

கடந்தாண்டு ஏலத்திற்கு முன்னதாக கேன் வில்லியம்சனை விடுவித்த பிறகு, ஐதராபாத் அணி கேப்டன் இல்லாமல் இருந்தது. 2018 இல் வார்னர் இல்லாத நேரத்தில் வில்லியம்சன் அந்த அணியை வழிநடத்தினார். 2022ல் ஐதராபாத் அணி வார்னரை நீக்கியது. வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2016ல் முதல் முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்றது.

காவ்யா மாறன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாக அதிகாரி காவ்யா மாறன் ஆவார். சன் டி,வி நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கொச்சியில் நடந்த மினி ஏலத்தின் போது இவர் ட்ரெண்டிங்கில் இருந்தார். அதன்பிறகு, தென் ஆப்ரிக்கா (SA20) லீக் தொடரில் வெளிநாட்டு ரசிகர் ஒருவர் அவருக்கு கல்யாண ப்ரொபோஸ் செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் பட்டியல்:

அப்துல் சமத், ஐடன் மார்க்ராம், ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், ஹாரி புரூக், நிதிஷ் குமார் ரெட்டி, அன்மோல்பிரீத் சிங், அகேல் ஹொசைன், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்தியன் ஃபரூக்கி, அகர்வால், ஹென்ரிச் கிளாசென், அடில் ரஷித், மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர யாதவ், மயங்க் தாகர்.

ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 2 ஆம் தேதி ஐதராபாத் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Aiden markram srh skipper for ipl 2023 tamil news

Exit mobile version