Advertisment

2 கால்பந்து வீராங்கனைகள் மீது தாக்குதல்; கால்பந்து கிளப் உரிமையாளர் சஸ்பெண்ட் - ஏ.ஐ.எஃப்.எஃப் நடவடிக்கை

“தீபக் ஷர்மாவை கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்ய ஏ.ஐ.எஃப்.எஃப் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது” என்று ஏ.ஐ.எஃப்.எஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
AIFF suspend

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காட் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த 2 கால்பந்து வீராங்கனைகள், கால்பந்து கிளப்பின் உரிமையாளர் ஷர்மா, மார்ச் 28-ம் தேதி இரவு தங்கள் அறைக்குள் நுழைந்து உடல் ரீதியாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய பெண்கள் கால்பந்து (ஐ.டபிள்யூ.எல்) லீக் இரண்டாவது பிரிவில் பங்கேற்ற இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காட் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த 2 கால்பந்து வீராங்கனைகள், கால்பந்து கிளப்பின் உரிமையாளர் ஷர்மா, மார்ச் 28-ம் தேதி இரவு தங்கள் அறைக்குள் நுழைந்து உடல் ரீதியாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: AIFF suspends Deepak Sharma for alleged physical assault of two women players

இந்திய மகளிர் லீக் 2-க்காக கோவாவில் தங்கியிருந்தபோது, கிளப்பின் இரண்டு பெண் கால்பந்து வீராங்கனைகளைத் தாக்கி, தவறாக நடந்து கொண்டதற்காக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எஃப்.எஃப்) கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினரான தீபக் சர்மாவை செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.

இந்திய பெண்கள் கால்பந்து (ஐ.டபிள்யூ.எல்) லீக் இரண்டாவது பிரிவில் பங்கேற்ற இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காட் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த 2 கால்பந்து வீராங்கனைகள், கால்பந்து கிளப்பின் உரிமையாளர் ஷர்மா, மார்ச் 28-ம் தேதி இரவு தங்கள் அறைக்குள் நுழைந்து உடல் ரீதியாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினர்.

“தீபக் ஷர்மாவை கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்ய ஏ.ஐ.எஃப்.எஃப் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது” என்று ஏ.ஐ.எஃப்.எஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோவா காவல்துறை தீபக் சர்மாவை சனிக்கிழமை கைது செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 341 (தவறான தடுத்தல்) மற்றும் 354ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு கிடைத்த ஏ.ஐ.எஃப்.எஃப்-க்கு அளிக்கப்பட்ட புகார் கடிதத்தில், இந்திய மகளிர் லீக் இரண்டாவது பிரிவில் நடந்த போட்டிக்குப் பிறகு, தங்களுடைய தங்குமிடத்திற்குத் திரும்பியதாகவும், இரவு உணவு முடிந்ததும் முட்டைகளை வேகவைத்துக்கொண்டிருந்தத 2 வீராங்கணைகள் தெரிவித்துள்ளனர். அப்போது, குடிபோதையில் இருந்த தீபக் சர்மா அவர்களது அறைகளுக்குள் புகுந்து அவர்களை தாக்கினார். இமாச்சலத்தில் இருந்து டெல்லி செல்லும் பயணத்தின் போது 2 பெண்கள் முன் ஷர்மா மது அருந்தியதாகவும், கோவாவிலும் மது அருந்தியதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.ஐ.எஃப்.எஃப் மார்ச் 30-ம் தேதி இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழுவையும் கலைத்தது, அதற்கு பதிலாக இந்த விஷயத்தை அதன் ஒழுங்குமுறைக் குழுவிற்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியது.

“ஏ.ஐ.எஃப்.எஃப் பெண்களுக்கான கால்பந்தாட்டத்தை பாதுகாப்பான மற்றும் செயல்படுத்தும் சூழலில் ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது. இதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இந்த வழக்கு இப்போது ஒழுங்குமுறைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் இது அவசரமாக எடுத்துக்கொள்ளப்படும்” என்று ஏ.ஐ.எஃப்.எஃப் தலைவர் கல்யாண் சவுபே கூறினார்.

“புகார்தாரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஏ.ஐ.எஃப்.எஃப் எடுத்துள்ளது. மேலும் தேவையான எந்த ஆதரவையும் தொடர்ந்து வழங்கும்” என்று தான் ஏ.ஐ.எஃப்.எஃப் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பெண்கள் கால்பந்தின் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது என கல்யாண் சவுபே கூறினார்.

“நாட்டில் தற்போது 27,030 பதிவு செய்யப்பட்ட பெண் வீராங்கனைகள் உள்ளனர், 15,293 பேர் செப்டம்பர் 2022 முதல் மார்ச் 2024 வரை பதிவு செய்துள்ளனர். பல்வேறு வயது பிரிவுகளில் பெண்கள் கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மிகவும் ஊக்கமளிக்கும் போக்குகளில் ஒன்றாகும்” என்று சவுபே கூறினார்.

“இந்த சீசனில், நாங்கள் முதல் முறையாக இந்தியன் மகளிர் லீக் 2 (IWL 2) தொடங்கினோம். அடுத்த சீசனில் இருந்து ஐ.டபிள்யூ.எல்-ல் பதவி உயர்வு மற்றும் வெளியேற்றத்தை அறிமுகப்படுத்த ஒரு திட்டவட்டமான திட்டம் உள்ளது. சமீபத்தில் துருக்கிய மகளிர் கோப்பையில் இந்தியா தனது சிறந்த முடிவை (ரன்னர்-அப்) செய்து ஐரோப்பிய எதிரணியைத் தோற்கடித்தது.

தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் கால்பந்து வீரர்களில் ஒருவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஷர்மா ஒருவரைத் தாக்குவது இது முதல் முறையல்ல. “அவர் முன்பு காட் கால்பந்து கிளப்பின் வீரர்களை அடித்ததைப் பார்த்தோம். அவர்களின் பெயர்களை என்னால் கூற முடியாது. இந்த போட்டிக்கு முன்பு நாங்கள் முகாமில் இருந்தபோது, அவர் ஒரு பெண்ணை அடித்ததைப் பார்த்தோம். அந்த நாளில் நாங்கள் மிகவும் பயந்தோம், ஆனால், ஏற்கனவே அணியில் இருந்த வீரர்கள் அவர் சில நேரங்களில் கோபப்படுவார், இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன” என்று கூறினார்.

“எனக்கு இது நடந்தபோது, நான் முதலில் புகார் அளிக்க விரும்பவில்லை. ஆனால், யாரும் புகார் கூறவில்லை என்றால், இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கை வளரும். நான் எதுவும் சொல்லாததால் அவரால் வேறு யாராவது அடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால் நான் ஒரு நிலைப்பாட்டை எடுத்தேன்” என்று அவர் கூறினார். மேலும், ஏ.ஐ.எஃப்.எஃப் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களுக்கு உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment