Advertisment

'3 போட்டி கூட ஆடல, அதுக்குள்ள அவருக்கு ஏன் ரெஸ்ட்?: இந்திய நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய அஜய் ஜடேஜா!

இந்திய இளம் வீரரான இஷான் கிஷனை அநியாயமாக நடத்துவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ajay Jadeja slams management over unfair treatment of Ishan Kishan Tamil News

சமீபத்தில் முடிவடைந்த டி20 தொடரில், கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

Ishan-kishan | indian-cricket-team | india-vs-australia: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி  4-1 என்கிற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. 

Advertisment

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான இஷான் கிஷன் இடம் பிடித்திருந்தார். முதல் 3 டி-20 போட்டிகளில் விளையாடிய அவர் இரண்டு அரைசதங்களுடன் 58, 52, 0 என ரன்கள் எடுத்தார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Ajay Jadeja slams management over unfair treatment of Ishan Kishan

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 25 வயதான இஷான் கிஷன் இடம் பிடித்திருந்த நிலையில், முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பின்னர் தொடர் முழுவதும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். 

சமீபத்தில் முடிவடைந்த டி20 தொடரில், கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அவரை அநியாயமாக நடத்துவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்போர்ட்ஸ் டாக்கில் பேசிய அவர், “உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு தொடர் நடந்துள்ளது. இஷான் கிஷன் மூன்று போட்டிகளில் விளையாடி வீட்டிற்குச் சென்றார் (ஓய்வெடுத்தார்). மூன்று போட்டிகளுக்குப் பிறகு அவர் ஓய்வெடுக்க வேண்டிய அளவுக்கு சோர்வாக இருந்தாரா?. 

அவர் உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் கூட விளையாடவில்லை. முதல் சில உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் லெவன் அணியில் அவர் தனது இடத்திற்கு தகுதியானவர். ஒரு நல்ல நாளில் எத்தனை இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடித்திருக்கிறார்கள்?. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கூட இஷான் கிஷன் விளையாடவில்லை. அவர் ஓய்வெடுக்க மூன்று போட்டிகளுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டார். எனவே, இது தொடரப் போகிறது என்றால், அவர் முழுமையாகத் தயாராக இருப்பதை எப்படி உறுதிப்படுத்துவீர்கள்? என்றும் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பினார்.

இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், இஷான் கிஷன் டி20 அணிக்கு வழக்கமான வீரராக இருந்து வருகிறார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூட இஷான் கிஷனின் தன்னலமற்ற அணுகுமுறையை பாராட்டியுள்ளார்.

“இஷான் கிஷன் ஒரு சிறந்த அணுகுமுறை கொண்டவர். அவர் நன்றாக விளையாடும்போது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அவர் அனைவரையும் மகிழ்விப்பவர், அவர் ஒவ்வொரு வீரரின் பேட், கையுறைகள் மற்றும் ஹெல்மெட்களை தயார் நிலையில் வைத்திருப்பார். அவர் வெளியே உட்காரும்போது ஒருபோதும் புகார் செய்யமாட்டார்" என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.

இஷான் கிஷன் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான டி20 மற்றும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia Indian Cricket Team Ishan Kishan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment