WTC Final 2023: Ajinkya Rahane AB De Villiers Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நேற்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆடர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா (15 ரன்), கில் (13 ரன்), புஜாரா (14 ரன்), விராட்கோலி (14 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்து அதிரடியாக விளையாடிய ஜடேஜா 51 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 318 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ரஹானேயை புகழும் ஏ.பி.டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 3-வது நாளில் அணியை மீட்க அஜிங்க்யா ரஹானே மீது ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் சில ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கி புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ரஹானே இவ்வளவு சிறப்பாக ஆடிப் பார்த்ததில்லை! அவரது தாமதமாக விளையாடும் நுட்பம் மிகவும் நன்றாக உள்ளது " என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil