தென் ஆஅப்பிரிக்க தொடரில் அஜிங்க்யா ரஹானே ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியிருந்தாலும், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
Ajinkya Rahane Tamil News: இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிகளில் துணை கேப்டன்களை அடிக்கடி மாற்றிய வண்ணம் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் அஜிங்க்யா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த தொடரில் அவர் பி.சி.சி.ஐ எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
Advertisment
இந்த நிலையில், தென் ஆஅப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் சுற்றுப்பயணத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
கேப்டன் ரோகித் சர்மாவின் துணை கேப்டன்கள் பட்டியல்:
தென் ஆஅப்பிரிக்காவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் அஜிங்க்யா ரஹானே ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியிருந்தாலும், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் 5வது இடத்தைப் பிடிக்க தயாராகி உள்ளார்கள்.
“அஜிங்க்யா ஒரு நிறுத்த இடைவெளி தீர்வு. ஆனால் உள்நாட்டு கிரிக்கெட் இருப்பதால் அவர் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வாரா என்பது வேறு விவாதம். அவர் நன்றாக ஸ்கோர் எடுத்தால், கதவு திறந்தே இருக்கும். அடுத்த துணை கேப்டன் யார் என்பது தேர்வுக் குழுவின் கையில் உள்ளது. அது குறித்து அவர்கள் முடிவு எடுப்பார்கள். ”என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தென் ஆஅப்பிரிக்க தொடரில் ரஹானேவுக்கு பதில் இந்தியாவின் துணை கேப்டனாக யாருக்கு வாய்ப்பு?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 3 மற்றும் 8 ரன்கள் எடுத்த நிலையில், அஜிங்க்யா ரஹானே நம்பிக்கை அளிக்கவில்லை.எனவே, அவர் அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவது கடினம்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் நீடிக்க போதுமான நம்பிக்கையை பெற்றிருக்கும் போது, ஷுப்மான் கில் 3வது இடத்தில் நீண்ட ஓட்டத்தை பெறுவார். அடுத்து 5வது இடம் மட்டுமே உள்ளது. அந்த இடத்திற்கு அஜிங்க்யா ரஹானே ஸ்ரேயாஸ் ஐயருடன் சண்டையிட வேண்டும். ஆனால், அடுத்த டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்ய தேர்வாளர்கள் விரும்புவதால், ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட் (தகுதி பெற்றால்) வாய்ப்பு பெறலாம்.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு ரிஷப் பண்ட் உடற்தகுதியுடன் இருப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் தயாராக இருந்தால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மற்றொரு போட்டியாளரான ஜஸ்பிரித் பும்ரா, தொடர்ச்சியான காயங்களால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிரீமியம் உறுப்பினராக உள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே 1 டெஸ்டில் இந்தியாவை வழிநடத்தியதால், அவர் துணை கேப்டன் பதவியை ஏற்கலாம். அவர் உடற்தகுதியுடன் இருந்தால், அவர் தான் முதல் தேர்வாக இருப்பார்.
உலகக் கோப்பைக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவாரா ரோகித்?
இந்தியா தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பு நிறைய முக்கியமான விவாதங்கள் நடைபெறும். அஜிங்க்யா ரஹானே மீண்டும் திரும்பிய பிறகு அவரை நீக்கி புதிய துணை கேப்டனை தேர்வு செய்யலாம். ரோகித் சர்மா கேப்டனாக நீடிப்பாரா அல்லது டெஸ்டில் கூட தொடர்வாரா என்பதை முடிவு செய்வதே மிக முக்கியமானது. தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி ஜூன் 2025ல் முடியும் வரை ரோகித் மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடுவது சாத்தியமில்லை.
உலகக் கோப்பைக்குப் பிறகு ரோகித்துடன் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கலந்துரையாடுவார். ரோகித் டெஸ்டில் இருந்து விலகினால், உடனடியாகப் பொறுப்பேற்கக் கூடிய கேப்டன் இந்தியாவிடம் இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர் தயாராக இல்லாத நிலையில், கேஎல் ராகுல் டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்கவைக்க போராடி வருகிறார். ஜஸ்பிரித் பும்ராவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ரிஷப் பண்ட் தென் ஆப்பிரிக்க தொடருக்கு திரும்புவாரா என்பது இன்னும் நிச்சயமற்றது. எனவே, ரோகித் இன்னும் ஓராண்டுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
“தலைமைத் தேர்வாளரின் வேலைகளில் ஒன்று, வீரர்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசுவது. ரோகித்தும் விராட்டும் அதிலிருந்து விடுபடவில்லை. ஆம், அவர்கள் விரும்பும் வரை நாங்கள் தொடர விரும்பியிருப்போம். ஆனால் அனைத்து சிறந்த வீரர்களும் தங்கள் திட்டங்களை கருத்தில் கொள்ள ஒரு நேரம் உள்ளது. மூன்று வடிவங்கள் மற்றும் ஐபிஎல் விளையாடுவது எளிதான வேலையாக இருக்காது, ”என்று நமது இதழுக்கு பேட்டியளித்த பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil