/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1749.jpg)
ajith meets swimmer kutraleeswaran thala 60 update - குற்றலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு... அதுவும் 15 வருடங்களுக்கு முந்தையக் கெட்டப்பில்
90'ஸ் கிட்ஸுக்கு நன்கு தெரிந்த பெயர் குற்றாலீஸ்வரன். இந்தியா சர்பாக சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து பல பதக்கங்களை வென்றுள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவர் 1996-ம் ஆண்டு விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், யாருமே அவ்வளவு சீக்கிரத்தில் நெருங்க முடியாத அஜித்தை குற்றாலீஸ்வன் சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படத்தை குற்றாலீஸ்வரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "தலயுடன் நம்பமுடியாத ஒரு மாலை. நான் உங்கள் பெரிய ரசிகன் என்று தல சொல்லும்போது, இந்த மனிதனின் எளிமை என்னை அசரடித்துவிட்டது. விளையாட்டு மேம்பாடு சம்பந்தமாக சில முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தின் பகிர்ந்துள்ளார்.
குற்றாலீஸ்வரனை சந்தித்துள்ளது மூலம் அவருடன் இணைந்து விளையாட்டுத் துறை சம்பந்தமாக பயிற்சி மையம் அல்லது அகாடமி போன்று அஜித் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 'நேர்கொண்ட பார்வை' படத்தின் அஜித்துடன் இணைந்து நடித்த பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு பேட்டியில் பதிலளித்த போது, "அஜித் அரசியலுக்கு வருவாரா என்றெல்லாம் என்னால் கூற முடியாது. ஆனால், அவரிடம் பேசியதில் இருந்து விளையாட்டுத் துறை சார்பாக ஏதாவது பயிற்சி மையம் போன்று ஏதாவது ஒன்று தொடங்கி, அதனால் பல இளைஞர்கள் பலன் பெற வேண்டும் என விரும்புகிறார்" என்று கூறியிருந்தார். ஒருவேளை, அது தொடர்பாக குற்றலீஸ்வரனை அஜித் சந்தித்து இருப்பாரோ என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
He is the famous swimmer #Kutraaleeswaranhttps://t.co/mtscpk9Xv5
— Ramesh Bala (@rameshlaus) August 24, 2019
கர்ணனுக்கு கிளியின் கண் இமை தெரிந்ததோ இல்லையோ, அஜித் ரசிகர்களுக்கு விவாதங்களுக்கும் யோசனைகளுக்கும் எல்லாம் அப்பாற்பட்டு வேறு ஒன்றை அந்த புகைப்படத்தில் கண்டறிந்து சிலாகித்து வருகின்றனர்.
குற்றாலீஸ்வரன் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் அஜித் உடல் எடையை குறைத்து நரை தாடி, நரை மீசை இல்லாமல் காணப்படுகிறார். கிட்டத்தட்ட 10 - 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த அஜித் தான் நம் நினைவுக்கு வருகிறார்.
புதிய தோற்றத்தில் இருக்கும் அஜித் அடுத்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.