Advertisment

'கிரிக்கெட்டிலும் நட்சத்திரம் தான்': செலிபிரிட்டி தொடரில் அடித்து நொறுக்கும் நடிகர் நாகார்ஜுனா மகன்

தனது தரமான பேட்டிங் ஃபார்மைத் தொடர்ந்த அகில் அக்கினேனி 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்து அசத்தினார்.

author-image
WebDesk
New Update
Akhil Akkineni unbeaten knock vs Bengal Tigers Tamil News

Akhil Akkineni scored unbeaten 57 off just 26 deliveries vs Bengal Tigers CCL 2023

CCL 2023: Celebrity Cricket League, Telugu Warriors vs Bengal Tigers, Akhil Akkineni Tamil News: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

Advertisment

தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனாக ஆர்யா உள்ளார். இந்த அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், விக்ராந்த், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு, பிருத்வி ஆகியோர் விளையாடுகின்றனர். தெலுங்கு வாரியர்ஸ் அணி கேப்டனாக நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான அகில் அக்கினேனி உள்ளார்.

கேரள ஸ்டிரைக்கஸ் அணியின் கேப்டனாக குஞ்சாக்கோ போபனும், கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப்பும், பஞ்சாப் தி ஷேர் அணி கேப்டனாக சோனுசூட்டும், பெங்கால் டைகர்ஸ் அணி கேப்டனாக கிசுசென் குப்தாவும், போஜ்புரி தபாங்ஸ் அணி கேப்டனாக மனோஜ் திவாரியும் விளையாடுகின்றனர்.

'கிரிக்கெட்டிலும் நட்சத்திரம் தான்': செலிபிரிட்டி தொடரில் அடித்து நொறுக்கும் நடிகர் நாகார்ஜுனா மகன்

இந்நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸ் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தெலுங்கு வாரியர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அகில் அக்கினேனி பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டார். மேலும், தொடரில் தனது 3 அரைசதத்தையும் பதிவு செய்தார். கடைசி வரை களத்தில் அகில் 26 பந்துகளில் 57 ரன்களும், அஷ்வின் 17 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணியை தெலுங்கு வாரியர்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

publive-image

இந்த நிலையில், தெலுங்கு வாரியர்ஸ் அணி கேப்டன் அகில் அக்கினேனியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தனது தரமான பேட்டிங் ஃபார்மைத் தொடர்ந்த அவர் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ச்சியாக 3வது சதத்தையும் விளாசி மிரட்டினார். இதனால், அகில் சினிமா நட்சத்திரமா? அல்லது கிரிக்கெட் நட்சத்திரமா? என்று வியந்து அவரை பாராட்டி வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவர் பற்றி பதிவுகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment