'பெண்ணாக பிறந்தேன் பெண்ணாகவே வாழ்கிறேன்': பாலின சர்ச்சைக்கு தங்கம் வென்று இமானே கெலிஃப் பதிலடி

இமானே கெலிஃப், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முதல் அல்ஜீரிய பெண்மணி என்கிற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் பின்னர் அல்ஜீரியா முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது.

இமானே கெலிஃப், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முதல் அல்ஜீரிய பெண்மணி என்கிற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் பின்னர் அல்ஜீரியா முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Algerias Imane Khelif opens up after winning Olympic gold Tamil News

கடந்த 2023 இந்தியாவில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதித் தேர்வில் அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப் தோல்வியடைந்தார்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக்கில் பல்வேறு சர்ச்சைகளும், உணர்ச்சிகரமான தருணங்களும் நிறைந்து காணப்படுகிறது. 

Advertisment

அவ்வகையில், அல்ஜீரிய நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் பாலின சர்ச்சைக்கு ஆளானர். மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் இமான் கெலிஃப், ஏஞ்சலா கரினி மூக்கில் குத்தினார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Algeria’s Imane Khelif opens up after winning Olympic gold

அதற்கு பதிலுக்கு குத்தாமல், போட்டி தொடங்கிய 46 வினாடிகளில் ஏஞ்சலா கரினி போட்டியை நிறுத்தினார். கெலிஃப் தன்னை குத்திய போது கடும் வலி ஏற்பட்டதாகவும், இதுவரை தனது குத்துச்சண்டை வாழ்வில் இப்படி ஒரு தாக்குதலை தான் எதிர்கொண்டதில்லை எனவும் கூறி, கெலிஃப் பெண் அல்ல எனவும் மறைமுகமாக குற்றம் சுமத்தி போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். 

Advertisment
Advertisements

இந்த பெரும் சர்ச்சையான நிலையில், டெஸ்டோடிரான் ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாலேயே ஒருவரை பெண் அல்ல என்று கூறிவிட முடியாது என்று இமானே கெலிஃப் மீதான குற்றச்சாட்டுகள் புறந்தள்ளப்பட்டன. மறுநாள் இமானே கெலிஃப் குறித்த தனது கருத்துக்கு ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரினார். ஆனால், இமானே கெலிஃப் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் சர்ச்சையை புறந்தள்ளிவிட்டு போட்டியில் கவனம் செலுத்தினார். 

தங்கம் வென்று பதிலடி 

இந்நிலையில், பாலின சர்ச்சைக்கு ஆளான நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

இந்த போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய இமானே கெலிஃப், "எல்லாப் பெண்களைப் போல நானும் ஒரு பெண். நான் பெண்ணாகப் பிறந்தேன். பெண்ணாகவே வாழ்கிறேன். ஆனால் வெற்றியைப் பொறுக்க முடியாத சிலர் இருக்கிறார்கள். அவர்களால் எனது வெற்றியைப் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த தங்கப் பதக்கம் தான் எனக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட தீவிர பிரச்சாரங்களுக்கான பதில்" என்று அவர் கூறினார். 

இமானே கெலிஃப், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முதல் அல்ஜீரிய பெண்மணி என்கிற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் பின்னர் அல்ஜீரியா முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் முதல் நடத்தப்பட்டு வருகிறது. 

முன்னதாக, கடந்த 2023 இந்தியாவில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதித் தேர்வில் அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப் தோல்வியடைந்தார். இதேபோல், உலக சாம்பியன் பட்டத்தை இருமுறை வென்ற தைவான் வீராங்கனை லின் யூ-டிங்-கும் பாலின சோதனையில் தோல்வி அடைந்தார். அவர்கள் இருவரும் அந்த தொடரில் இருந்து பாதியில் நீக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Paris 2024 Olympics

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: