அனைத்து துறைகளிலும் பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. அதே போல் காவல் துறையில் மகளிர் காவலர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
அதோடு அவர்கள் மாநில தேசிய சர்வதேச அளவில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால், தமிழ்நாடு அரசு அவர்கள் காவல் துறையில் மகளிருக்கு பல்வேறு நலத் திட்டங்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் அறிவித்து உள்ளார்.
அந்த அறிவிப்பின் படி, மாநில அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. மேலும், 15.06.2024 முதல் 20.06.2024 வரை தமிழ்நாடு காவல் துறையினரால் ‘மகளிர் காவலருக்கான சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி’ செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், 13 விதமான போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவை ரைபிள் (5 போட்டிகள்), பிஸ்டல், ரிவால்வர் (4 போட்டிகள்) & கார்பைன் , ஸ்டென்கன் (4 போட்டிகள்) பிரிவுகளில் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் வழங்கிய சமீபத்திய விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அகில இந்திய அளவில் பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சூடுதல் போட்டியில் கோவை ரயில்வே காவல் நிலைய பெண் தலைமை காவலர் ரூபாவதி என்பவர் 300 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“